இறால் பொரியல்

0 கருத்துகள்


இறால் பொரியல்



தேவையான பொருட்கள்:

இறால் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை - சிறிதளவு

செய்முறை :

1.இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் உப்பு சேர்த்து தண்ணீரில் 3 முறை அலசவும்.
2.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3.வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் இறால் சேர்க்கவும்..
4.இறாலுடன் தூள் வகைகள் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.
5. இறால் வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லிதழை தூவி இறக்கவும்..
சுவையான எளிதில் செய்ய கூடிய இறால் பொரியல் தயார்..



பீன்ஸ் கேரட் பொரியல்

2 கருத்துகள்

பீன்ஸ் கேரட் பொரியல்

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 200 கிராம்
கேரட் - 100 கிராம்
வெங்காயம் - 1
கடுகு - 1/2 ஸ்பூன்
பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெருஞ்சீரக தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. பாசிப்பருப்பை அரைபதமாக வேக வைத்து கொள்ளவும்.
2. பீன்ஸ்,கேரட்டை, வெங்காயம் இவற்றை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.



4. பின்னர் பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்...அத்துடன் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், பெருஞ்சீரக தூள் , உப்பு சேர்க்கவும்.



5. 1/4 கப் தண்ணிர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.


6. நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் தூவி பிரட்டி இறக்கவும்.



சுவையான பீன்ஸ் கேரட் பொரியல் தயார்.அனைத்து குழம்பு வகைகளுக்கும் ஏற்ற பக்க உணவு...


சிக்கன் ஜல்ஃப்ரேஸி

3 கருத்துகள்


                                                       சிக்கன் ஜல்ஃப்ரேஸி

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 5 துண்டு
தக்காளி - 2
குடைமிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பட்டை, கிராம்பு - தலா 2
உப்பு - 3/4 ஸ்பூன்
மல்லி, புதினா - தேவையான அளவு
எண்ணைய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசிறி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. கடாயில் எண்ணைய் ஊற்றி பட்டை, கிராம்பு தாளித்து சிக்கன் கலவையை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
3. சிக்கனில் வரும் நீரே போதுமானது..தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
4. சிக்கன் ஓரளவு வெந்ததும் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. குடைமிளகாய் ,சிக்கன் வெந்ததும் தண்ணீர் வற்றி  வரும் போது மல்லி புதினா தூவி இறக்கவும்..

சுவையான சிக்கன் ஜல்ஃப்ரேஸி தயார்...


இதனை பிரியாணி, நெய்சாதம் ஆகியவற்றுக்கு பக்க உணவாக பரிமாறலாம்.
பரோட்டா, சப்பாத்திக்கும் ஏற்றது.

அறிமுகம்

3 கருத்துகள்

ஹாய்,

ஒராண்டுக்கும் மேலாக ப்ளாக் படிச்சு படிச்சு எனக்கும் ப்ளாக் ஆரம்பிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை....
ஒரு வழியாக நானும் ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன்...இதில் எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள், எனக்கு பிடித்த விஷயங்கள் ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்ள விரும்பிகிறேன்..

நன்றி...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes