பாகற்காய் பொரியல்




பாகற்காய் பொரில்

தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
முட்டை - 1
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மல்லிதழை - சிறிது
எண்ணெய் - 1/4 கப்

செய்முறை :

1.பாகற்காயை பொடியாக அரிந்து 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து பிசிறிக் கொள்ளவும்.வெங்காயத்தை மெல்லியதாகவும் , பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.
2.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் , மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து  வதக்கவும்.



3.பாகற்காயை நன்கு அலசி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.



4.பின் பாகற்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.



5.காய் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கொத்தி விட்டு மல்லிதழை தூவி இறக்கவும்.



முட்டை பிடிக்காதவர்கள் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கலாம்.


சுவையான பாகற்காய் பொரியல் தயார்.


5 கருத்துகள்:

  1. மிக அருமையான மருத்துவ குறிப்பு

    பதிலளிநீக்கு
  2. http://asiyaomar.blogspot.com/2014/02/15-guest-pos-t-prawn-adai.html மூலம் உங்கள் தளம் வருகை... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

    பாகற்காய் பொரியல் - பயனுள்ள குறிப்பு... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மிக அறுமை ஷமீ, நிச்சயம் உன் முறையில் செய்து பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜலீலா அக்கா...
    நன்றி சகோ தனபாலன்..follower ஆனதில் மகிழ்ச்சி....
    நன்றி ஆசியா அக்கா....அவசியம் செய்து பாருங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes