சிக்கன் பிரியாணி

3 கருத்துகள்

சிக்கன் பிரியாணி



தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 2 கப்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பழுத்த மிளகாய் - 3
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
முந்திரி - 10
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு , ஏலக்காய் - 2
உப்பு - 2 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மல்லிதழை , புதினா - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை :

1.பாஸ்மதி அரிசியை களைந்து தண்ணீரில் 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.
2.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.முந்திரியை 1/2 மணி நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3.கோழியை சுத்தம் செய்து பாதி அளவு இஞ்சிபூண்டு , 1 ஸ்பூன் மிளகாய் தூள், சோள மாவு,உப்பு சேர்த்து பிசிறி 1 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்..
4.பின்னர் சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுக்கவும்.
5.அரிசியை களைந்து 3 கப் தண்ணீர் , 1 ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்..
6..கடாயில் நெய் ,எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு , ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வெங்காயம் , மிளகாய் சேர்த்து வதக்கவும்.




7.மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்..பச்சை வாசம் போனதும் தக்காளி ,மல்லி புதினா சேர்த்து குழைய வதக்கவும்.


8.முந்திரி விழுதினை சேர்க்கவும்..பின்னர் தூள் வகைகள் , உப்பு, தயிர் சேர்த்து பிரட்டி விடவும்...




9.பின்னர் வறுத்து வைத்த கோழி துண்டுகளை குருமாவில் சேர்த்து 1/2 கப் நீ\ர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்...




10.ஒரு பெரிய பாத்திரத்தில் பாதி அளவு சோறு, கொஞ்சம் குருமா, மீதி சோறு குருமா என அடுக்காக வைத்து ஒரு சேர அரிசி உடையாமல் பிரட்டி விடவும்.கடைசியில் 2 கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.



12.மேலாக கோழி துண்டுகள் வைத்து,மல்லி புதினா தூவி  விடவும்..
13.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து 10 நிமிடம் தம் போடவும்.


சூடான சிக்கன் பிரியாணி தயார்.
இதனை ஆனியன் ரைத்தா ,முட்டை ,கோழி வறுவல் உடன் பரிமாறலாம்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes