கொத்தமல்லி சட்னி


கொத்தமல்லி சட்னி 

தேவையான பொருட்கள் : 

தேங்காய் - 1/2 மூடி
கொத்தமல்லி தழை - 1/2 கப்
பொட்டுகடலை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - 3/4 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. மல்லிதழையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

2. மல்லிதழையுடன் தேங்காய், பொட்டுகடலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, 1/2 கப் நீர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.


3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.



சுலபமாக செய்ய கூடிய கொத்தமல்லி சட்னி தயார்.

5 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes