பீஃப் பொரியல்


பீஃப் பொரியல்

தேவையான பொருட்கள்:


பீஃப் - 1/2 கிலோ

தக்காளி - 2
பச்சை மிளகாய் -2
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மல்லி, புதினா - 1/2 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1/4 கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

செய்முறை : 


1. பீஃபை சுத்தம் செய்து 7 அல்லது 8 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசிக் கொள்ளவும். தக்காளியை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கவும்.


2. பீஃபை 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து நுரைத்து வந்ததும் வடிகட்டி கொள்ளவும்.




3. குக்கரில் எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்    தாளிக்கவும்.


4. பின்னர்  இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.




5. பீஃபை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். தூள் வகைகளை சேர்த்து தூள் வாசம் போகும் வரை பிரட்டி 1/2 கப் தயிர் ஊற்றி 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.



6. கறி நன்றாக வெந்து தண்ணீர் வற்றி பொரியல் பதமாக இருக்கும். தண்ணீர் அதிகமாக இருந்தால் வற்றும் வரை அடுப்பில் சிம்மில் வைக்கவும். 




கடைசியாக மல்லி, புதினா, கறிவேப்பிலை தூவி நன்கு பிரட்டி விடவும்.

சுவையான பீஃப் பொரியல் தயார். நெய் சாதம், தேங்காய் சாதம் இவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


பரோட்டா, சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.


2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes