கத்தரிக்காய் பொரியல்

2 கருத்துகள்


கத்தரிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 1/4 கிலோ 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. கத்தரிக்காயை நீரில் அலசி சதுரமாக நறுக்கி  கொள்ளவும்.

2. கத்தரிக்காயுடன் தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசிறிக் கொள்ளவும்.


3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, வரமிளகாய்,
  கறிவேப்பிலை சேர்த்து  தாளிக்கவும்.


4. பின் கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

5. கத்தரிக்காய் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கவும்.



   எளிதில் செய்ய கூடிய கத்தரிக்காய் பொரியல் தயார்.
   அனைத்து சாத வகைகளுக்கும் நல்ல சைட்டிஷ்.

புது வரவு

1 கருத்துகள்



புது வரவு

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல செய்தியோடு பதிவிடுகிறேன்.

எங்களுடைய மகிழ்வை நட்புகள் அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பதிவு.

எங்களுக்கு இந்த புதிய வருடத்தில் தாய், தந்தை என்னும் பதவி உயர்வு தந்திருக்கிறாள் எங்கள் செல்ல பெண்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்.


 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes