கத்தரிக்காய் பொரியல்


கத்தரிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 1/4 கிலோ 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. கத்தரிக்காயை நீரில் அலசி சதுரமாக நறுக்கி  கொள்ளவும்.

2. கத்தரிக்காயுடன் தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசிறிக் கொள்ளவும்.


3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, வரமிளகாய்,
  கறிவேப்பிலை சேர்த்து  தாளிக்கவும்.


4. பின் கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

5. கத்தரிக்காய் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கவும்.



   எளிதில் செய்ய கூடிய கத்தரிக்காய் பொரியல் தயார்.
   அனைத்து சாத வகைகளுக்கும் நல்ல சைட்டிஷ்.

2 கருத்துகள்:

  1. ஆஹா ஷமீ வந்தாச்சா கத்தரிக்காய் பொரியல் எனக்கு பிடித்தமான ரெசிபி அருமை.தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகள் இல்லை என்றவுடன் உங்கள் blog வரவே இல்லை. இனி வருவேன். குட்டி பாப்பா எப்படி இருக்கா ? என்ன பெயர் வைத்து இருக்கீங்க ?

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கமெண்ட் ஸ்பேமில் இருந்தது.தற்பொழுது தான் பார்த்தேன்.

    என் பெண் நன்றாக இருக்கிறாள். ஆயிஷா ஃபாத்திமா என்று பெயர் வைத்துள்ளோம்.

    நீங்கள் இப்பொழுது அதிகம் பதிவிடுவதில்லையா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes