முருங்கைகீரை பொரியல்


முருங்கைகீரை பொரியல்

தேவையான பொருட்கள் :

முருங்கைகீரை - 2 கப்
வெங்காயம் - 1
வரமிளகாய்  - 2
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய்ப்பூ - 1/2 கப்
உப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி வைக்கவும்.வெங்காயத்தை 
   மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
2. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்      தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.


3. கீரையை சேர்த்து நன்கு பிரட்டி 1/4 கப் நீர் சேர்த்து வேக விடவும்.




4. கீரை வெந்தவுடன் தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.


சத்தான முருங்கைக்கீரை பொரியல் தயார்.


* சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* கீரை நிறம் மாறாமல் இருக்க மூடி போடாமல் சமைக்கவும்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes