நுங்கு சர்பத்


நுங்கு சர்பத்

தேவையான பொருட்கள் : 

பனைநுங்கு - 10
பால் - 1/2 லிட்டர்
சீனி - 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் மில்க் எசன்ஸ் - 1 ஸ்பூன்

செய்முறை :

1. நுங்கை தோல் உரித்து கழுவி வைக்கவும்.


2. பின்னர் நீளமான குவளை கொண்டு சிறிய துண்டுகளாக கொத்தி விட்டு கொள்ளவும்.


3. பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து சீனி சேர்த்து கலந்து வைக்கவும்.
4. ஆறிய பாலில் ரோஸ் மில்க் எசென்ஸ் சேர்த்து நுங்கு துண்டுகளையும் கலந்து ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.



கோடை வெயிலுக்கேற்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு சர்பத் தயார்.


நுங்கு சீசன் என்பதால் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

4 கருத்துகள்:

  1. நாங்கள் இப்போ அமெரிக்காவில் மகள் வீட்டில் இருக்கிறோம். கொஞ்சம் பிஸி. இங்கு குளிர் அதிகமாக இருக்கு. இருந்தாலும் உங்கள் நுங்கு சர்பத்தை ருசி பார்த்து விட்டேன். அருமையாக இருந்த்தது. நீங்க சிங்கப்பூர் வந்துட்டீங்களா ஷமீ? நாங்கள் இந்தியாவுக்கு செப்டம்பர் மாதம் தான் வருவோம்.

    பதிலளிநீக்கு
  2. உங்க பதிவை பார்த்து ரொம்ப மகிழ்ச்சி.

    அமெரிக்கா சென்றது பற்றி சந்தோஷம். வெயிலில் இருந்து தப்பிச்சுட்டீங்க.

    நான் இந்தியாவில் தான் இருக்கேன் மா. இன்னும் ஓரிரு மாதங்கள் இங்கு இருக்கலாம்ன்னு இருக்கேன்.

    மகளுக்கு ஸ்பெஷலாக செய்து கொடுக்கும் ரெசிப்பி எல்லாம் எங்களுக்கும் அனுப்புங்க.

    பதிலளிநீக்கு
  3. சூப்பர்..நுங்கு சாப்பிட்டு 10 வருஷமே இருக்கும்! ஹூம்ம்ம்!!

    பதிலளிநீக்கு
  4. கிடைச்சா சாப்பிட்டு பாருங்க மகி.

    நான் கூட 3 வருடம் கழித்து இப்பொழுது தான் சாப்பிட முடிந்தது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes