இறால் க்ரேவி



இறால் க்ரேவி 

தேவையான பொருட்கள் : 


இறால் - 1 கப் 

வெங்காயம் - 2 
தக்காளி - 2 
பச்சை மிளகாய் - 2 
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்  
உப்பு - 1 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை - சிறிது   

செய்முறை :


1. இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும், பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும். 

2. இறாலுடன் பொடி வகைகள் சேர்த்து பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும். 





3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 






4. பின்னர் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். 






5. ஊற வைத்த இறாலை அதனுடன் சேர்த்து பிரட்டி விடவும். 5 நிமிடம் கழித்து 1 கப் தண்ணீர் சேர்த்து சிம்மில் வைக்கவும். 






6. இறால் வெந்து எண்ணெய் பிரிந்து வரும்பொழுது மல்லிதழை தூவி விடவும். 




காரசாரமான இறால் க்ரேவி தயார். 





இதனை அனைத்து டிபன் வகைகளுடனும் தொடுகறியாக சாப்பிட நன்றாக இருக்கும்.   


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes