ராகி சேமியா உப்புமா


ராகி சேமியா உப்புமா 

தேவையான பொருட்கள் :

ராகி சேமியா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
கேரட் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன் + 1/4 ஸ்பூன்
எண்ணெய் / நெய் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி, புதினா - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை : 

1. ராகி சேமியாவை ஒரு சட்டியில் 4 கப் தண்ணீருடன் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 3 நிமிடம் ஊற வைத்து ஸ்டீமரில் 5 நிமிடம் வேக வைத்து தட்டில் கொட்டி வைக்கவும்.


2. வெங்காயம், பச்சை மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.

3. பானில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கடலை பருப்பு தாளித்து வெங்காயம், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.

4. பின்னர் பச்சை மிளகாய், கேரட் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். மிளகு தூள் சேர்க்கவும்.

5. ராகி சேமியாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

6. 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல், மல்லி புதினா சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.

சுவையான ராகி சேமியா உப்புமா தயார்.

புதினா துவையலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இந்தியாவில் இருந்தவரை வாரம் ஒருமுறை எங்கள் வீட்டில் காலை உணவு இது தான். இங்கு கணவருக்கு பிடிக்காததால் நான் அதிகம் செய்வதில்லை.

2 கருத்துகள்:

  1. ஷமீ உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    நான் பெங்களூருக்கு மகன் வீட்டுக்கு சென்ற படியால் கணினி பக்கம் வரமுடியவில்லை. இனி தொடர்கிறேன். ராகி சேமியா உப்புமா பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மா.

    நீங்கள் 2 வாரங்கள் வலைப்பூவில் இல்லாததால் உங்கள் குறிப்புகளை மிஸ் செய்தோம். இனிமே கலக்குங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes