மாங்காய் பச்சடி


மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள் :

மாங்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன் 
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பில்லை - 2 கொத்து
உப்பு - 1 ஸ்பூன்
சீனி - 1 ஸ்பூன் 
எண்ணைய் - தேவையான அளவு

செய்முறை:

1. மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக செதுக்கி வைத்து கொள்ளவும்..


2. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.


4. பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.




5. செதுக்கிய மாங்காய் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.




6. தூள் வகைகள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.




7. மாங்காய் வெந்து வரும் சமயம் சீனியை சேர்க்கவும்.



8. சீனி கரைந்து எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும். 


இனிப்பும் காரமான மாங்காய் பச்சடி தயார்...



இதனை திருமண விருந்துகளிலும் , விஷேஷங்களிலும் பிரியாணி ,நெய் சோறு இவைகளுக்கு சைட் டிஷ் ஆக இடம்பெறும்...




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes