சிக்கன் முர்தபா 


சிக்கன் முர்தபா
 

தேவையான பொருட்கள் : 

மைதா - 2 கப்
உப்பு - 3/4 ஸ்பூன் 
சீனி - 1/2 ஸ்பூன்
பால் - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு 
எண்ணெய் - 1/4 கப்

ஸ்டஃப்பிங் செய்ய : 

போன்லெஸ் சிக்கன் - 200 கிராம் 
வெங்காயம் - 1/2 கிலோ 
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 ஸ்பூன் 
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன் 
எண்ணெய் - 1/4 கப்
முட்டை - 2
புதினா - சிறிதளவு   

செய்முறை : 

1. மைதாவுடன் உப்பு, சீனி, பால் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.



2. மாவை சிறு சிறு உருண்டையாக போட்டு எண்ணெயில் பிரட்டி வைக்கவும். 


3. மாவு உருண்டை 4 மணி நேரம் ஊறினால் விசிறுவதற்கு நன்றாக இருக்கும்.
4. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், புதினா சேர்த்து வதக்கவும். 


5. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.



6. தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.


7. சிக்கன் வெந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.


8. ஒரு கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். 


9. ஒரு பெரிய தாம்பாளத்தில் ஒரு மாவு உருண்டை வைத்து லேசாக தேய்த்து பின்பு பரோட்டா போடுவது போல் விசிறி கொள்ளவும். 



10. அதன் நடுவில் 2 டேபிள் ஸ்பூன் சிக்கன் கலவையை வைத்து அடித்து வைத்துள்ள முட்டை 1 டேபிள் ஸ்பூன் மேலாக ஊற்றி நான்கு புறமும் மடிக்கவும். 




11. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மடித்த பரோட்டாவை போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும். 





 சுவையான சிக்கன் முர்தபா தயார். 

 சிக்கன் குழம்பு, மட்டன் குழம்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்.   




 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes