சிக்கன் ஜல்ஃப்ரேஸி
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 5 துண்டு
தக்காளி - 2
குடைமிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பட்டை, கிராம்பு - தலா 2
உப்பு - 3/4 ஸ்பூன்
மல்லி, புதினா - தேவையான அளவு
எண்ணைய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசிறி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. கடாயில் எண்ணைய் ஊற்றி பட்டை, கிராம்பு தாளித்து சிக்கன் கலவையை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
3. சிக்கனில் வரும் நீரே போதுமானது..தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
4. சிக்கன் ஓரளவு வெந்ததும் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. குடைமிளகாய் ,சிக்கன் வெந்ததும் தண்ணீர் வற்றி வரும் போது மல்லி புதினா தூவி இறக்கவும்..
சுவையான சிக்கன் ஜல்ஃப்ரேஸி தயார்...
இதனை பிரியாணி, நெய்சாதம் ஆகியவற்றுக்கு பக்க உணவாக பரிமாறலாம்.
பரோட்டா, சப்பாத்திக்கும் ஏற்றது.
கருத்திற்க்கு மிக்க நன்றி ஆசியா அக்கா...
பதிலளிநீக்குarumai...
பதிலளிநீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்கு