கோதுமை ரவை பிரியாணி


இது இணையத்தில் பார்த்து முயற்சித்த குறிப்பு தான். சுவையாக இருந்தது. நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.....

கோதுமை ரவை பிரியாணி

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி  - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
குடைமிளகாய் - 1/2
காலிப்ளவர் - 1/2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
மல்லிதழை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க :

பட்டை - 2 துண்டு
கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா 1

செய்முறை :

1. கோதுமை ரவையை அலசி வைத்து கொள்ளவும். காய்கறிகளை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். காலிப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து சுடுநீரில் போட்டு வடிகட்டி  வைக்கவும். 

2. குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க குடுத்துள்ளதை தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.


3. இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதங்கியதும் குடைமிளகாய், கேரட், காலிப்ளவர் சேர்க்கவும்.

4. பின்னர் தூள் வகைகள், தயிர் சேர்க்கவும்.  கோதுமை ரவையை சேர்த்து நன்கு மசாலாவில் சேரும்படி பிரட்டி விடவும்.

5. 2 கப் தண்ணீர் சேர்த்து எல்லாம் ஒரு சேர பிரட்டி விட்டு 1 விசில் வந்ததும் இறக்கி மல்லிதழை தூவி பரிமாறவும்.

வாசமான ஹெல்தி கோதுமை ரவை பிரியாணி தயார்.

காலை உணவிற்கு ஏற்றது. தயிர் பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருந்தது.

2 கருத்துகள்:


  1. கோதுமை ரவை பிரியாணி பார்க்கவே சூப்பரா இருக்கு ஷமீ. பார்சல் ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு இல்லாததா இப்போவே அனுப்பிடுறேன்.

    கருத்துக்கு ரொம்ப நன்றி சாரதாம்மா.

    செஞ்சு பாருங்க.நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes