ப்ரோக்கோலி இறால் பொரியல்


ப்ரோக்கோலி இறால் பொரியல்

தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி  - 1
இறால் - 10
வெங்காயம் - 1
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.ப்ரோக்கோலியை மெல்லிய பூக்களாக நறுக்கி சுடு நீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.


3. இறாலை சேர்த்து சிறிது வதக்கி தூள் வகைகள் சேர்த்து பிரட்டி விடவும்.



4. பின்னர் ப்ரோக்கோலியை சேர்த்து ஒரு கை நீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.

4. 5 நிமிடத்தில் வெந்து விடும்.

சுலபமாக செய்ய கூடிய இறால் ப்ரோக்கோலி பொரியல் ரெடி.


* விரும்பினால் சிறிது தேங்காய் துருவல் சேர்க்கலாம்.

4 கருத்துகள்:

  1. ப்ரோக்கோலி இறால் பொரியல் செய்முறை சுலபமாக இருக்கு. அசத்துங்க ஷமீ.

    பதிலளிநீக்கு
  2. செயல்முறை அருமையா இருக்கு,,

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி சாரதாம்மா, மகேஸ்வரி.

    ப்ரோக்கோலி பெண்கள் அவசியம் சாப்பிடனும்னு படிக்கிறோம். நம்ம ருசிக்கு ஏற்ப செஞ்சாதானே சுவைக்கிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes