வாடகை வீடுகள் - 3


வாடகை வீடுகள் - 3

வாடகை வீடுகள் முதல் பகுதியை காண:

வாடகை வீடுகள் - 1

வாடகை வீடுகள் இரண்டாம் பகுதியை காண:


வாடகை வீடுகள் - 2

ஒரு முறை எழுதிய வாடகை வீடுகள் -3 பகுதி தவறுதலா நீக்கிட்டேன்.


அது தான் கால தாமதம். 

ஒவ்வொரு முறையும் ரூம் மாறுவதற்கு படும் சிரமங்களும் இங்கு அதிகம். 

அதில் முக்கியமானது பாக் பண்ணுவது தான். பார்க்க கொஞ்சமாக இருப்பது போல முதலில் தோன்றும்.

அதற்கு அப்புறம் நிறைய சேர்ந்து விடும். இதற்காகவே வாங்குவதை குறைத்து கொண்டோம்.

சமையல் பொருட்கள் தான் அதிகம் சேர்ந்து விடுகிறது. 

சிலர் ஆட்கள் வைத்து பொருட்களை மூவ் பண்ணுவதும் உண்டு. 

சிங்கையை  பொருத்தவரையில் வீட்டு ஓனர்கள் போடும் கண்டிஷன்கள் அர்த்தமற்றவையாக தான் இருக்கும்.

1. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டும். (ஆனால் ஓனர் மனைவி வீட்டில் தான் இருப்பார்)

2. குழந்தை இல்லாமல் இருந்தால் உடனே வீடு கிடைக்கும். (அப்போ தான் அவங்க வீட்டு குழந்தை ப்ரைவசியா விளையாடுமாம்).

அப்படி குழந்தை இருந்தாலும் அழ கூடாது. என்ன ஒரு கொடுமை பாருங்க.. 

இது என் கணவரின் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம். இதை சொல்லியே வீடு காலி செய்ய வைத்து விட்டார்கள்.

இதன் காரணமாகவே குழந்தையை இந்தியாவில் விட்டு விட்டு இங்கு பணிபுரியும் பெண்களும் உண்டு. என் பழைய அலுவலகத்தில் ஒரு பெண் அப்படி இருந்தார். பாவம் குழந்தையை நினைத்து கொண்டு இங்கு வாழ்க்கையை நடத்துவது சிரமம் தான்.

அவரும் நானும் உணவு இடைவேளைகளில் வீட்டு கதைகளை தான் பேசுவோம். அவர் சொல்வது இன்னும் கொடுமையாக தான் இருக்கும்.

செய்து வைத்த உணவு பாதி நாள் இருக்காது என்று சொல்வார். எனக்கும் ஒரு வீட்டில் இந்த அனுபவம் நிறைய உண்டு.

அவசரத்திற்கு உதவுமே என்று எப்பொழுதும்  ப்ரோசன் பரோட்டா பெரிய பாக்கெட் வாங்கி வைத்திருப்பேன். ஆனால் எனக்கு உதவியதோ இல்லையோ என் ஓனருக்கு நன்றாக உதவியது. எங்கள் செலவில் பல நாட்கள் டின்னர் முடித்து விடுவார்.

இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் எடுத்தால் சொல்லவே மாட்டார். திருப்பி வைக்கவும் மாட்டார்.

நாம் பரோட்டா தான் இருக்கிறதே அதை டின்னருக்கு சாப்பிட்டு கொள்ளலாம் என்று நினைத்து வந்து பார்த்தால் இருக்காது.

இதை போய் கேட்பதா என்று நானும் நிறைய முறை விட்டு விட்டேன்.

ஒரு முறை பொறுக்க மாட்டாமல்  எடுத்தீர்களா   அக்கா என்று கேட்ட பொழுது ஆமாம் கொத்து பரோட்டா சாப்பிட வேண்டும் போல இருந்தது 6 தான் எடுத்தேன் என்று சொன்னார்.

அது போல் இந்தியா சென்று வரும் பொழுது கொண்டு வரும் புளி, மசாலா பாக்கெட்டுகள் கேட்காமலேயே எடுத்து கொள்வார். இப்படி நிறைய சொல்லலாம்.


இந்த தொல்லைகாகவே அடுத்த வீடு போயாச்சு.

வீட்டு ஓனர்கள் இப்படி செய்யறதுனால கடந்த இரண்டு வருடங்களா ஒரு முழு வீட்டையே வாடகைக்கு எடுக்கும் பழக்கம் இப்போ வந்துடுச்சு.

சிலர் முழு வீட்டை எடுத்து இரண்டு குடும்பங்கள் ஷேர் பண்ணிக்குறாங்க. 

உதாரணமா முழு வீடு 2,200 டாலர் கு எடுக்குறோம்னா மாஸ்டர் ரூம் எடுப்பவர்கள் 1200, காமன் ரூம் எடுப்பவர்கள் 1000 குடுக்கணும். எலெக்ட்ரிக் பில், கேஸ் தனியா வரும். கொஞ்சம் செலவு தான். ஆனால் நிம்மதியா இருக்கலாம். இப்போ இது தான் ட்ரெண்ட் இங்கே.

நான் ஒரு ஸ்டுடியோ டைப் ப்ளாட்ல 2 வருடம் இருந்தேன். ப்ரைவசியாகவும் இருந்தது. எந்த தொல்லையும் இல்லை. 

நமது நாட்டில் இருப்பவர்கள் அவங்களுக்கு என்ன வெளிநாட்டில் ஜாலியாக இருக்கிறார்கள் என்று நினைப்பதுண்டு. ஆனால் இங்கு படும் சிரமங்கள் நமக்கு தானே தெரியும்.


மூன்று பகுதிகளையும் பொறுமையாக படித்த நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி.


8 கருத்துகள்:

  1. வாடகை வீடுகள் மூன்று பகுதியும் அருமையாக எழுதி இருக்கீங்க ஷமீ. ஆனால் சிங்கையில் போடும் condition எல்லாம் பயமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாரதாம்மா..

      ஆமாம் இங்கு போடும் கண்டிஷன்கள் எல்லாம் கொடுமையாக தான் இருக்கும்.

      நீக்கு
  2. முழுவதும் புதிதாக இருக்கு..இந்த ஷேரிங் பற்றி அவள் விகடனில் எப்பொழுதோ படித்த ஞாபகம்..உங்க அனுபவத்தைப் பகிர்ந்ததுக்கு நன்றி!! வீட்டுக்காரங்க கொட்டம் ஓவரா இருக்கும் போலிருக்கே?? இந்தியர்கள் மட்டும்தான் இப்படி வாடகைக்கு விடறாங்களா? இப்படி விடுவதுக்கு அரசாங்கம் கேள்வி எதுவும் கேட்காதா?? இங்கெல்லாம் இப்படி நான் பார்த்ததே இல்லைப்பா..! உங்களுக்கு தொந்தரவில்லாத ஹவுஸ் ஓனர் இருக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மஹி.

      இப்பொழுது இருக்கும் ஹவுஸ் ஓனர் பரவாயில்லை...நாங்களும் இப்போ ரூம் கண்டுபிடிக்கிறதுல எக்ஸ்பர்ட் ஆயிட்டோம்ல ...

      இதற்கு அரசாங்கம் எதுவும் செய்யாது. வெளிநாட்டவர்களுக்கு எந்த சலுகையும் எதிர்பார்க்க முடியாது. குடியுரிமை பெற்றால் தான் வீடு வாங்கலாம்.

      சீனர்களும் வாடகைக்கு விடுவார்கள். ஆனால் இந்தியர்களுக்கு அவர்கள் குடுக்க மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு சமைக்க கூடாது. சிலர் காபி, இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்ற லைட் குக்கிங் மட்டுமே அனுமதிப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.

      நீக்கு
  3. நல்ல பகிர்வு, மூன்று பகுதியும் படித்தேன். அது சரி நாம் கொஞ்சம் உதவின்னு செஞ்சா இப்படியா, உண்மைதான்,, இப்ப எந்த தொந்தரவும் இல்லாத வீடு தானே,, வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகி.

      இப்பொழுது இருக்கும் வீடு நல்ல வீடு தான். முன்பு இருந்ததற்கு எவ்வளவோ தேவலாம்.

      நீக்கு
  4. / கொத்து பரோட்டா சாப்பிட வேண்டும் போல இருந்தது 6 தான் எடுத்தேன் என்று சொன்னார்./

    இந்த ஒரு உதாரணம் மூலம் அவர்கள் மற்ற கொடுமைகளும் புரிகிறது... கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. தனிவீடு அல்லது ஷேரிங் தான் சரிவரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானு.

      நான் சொன்னது ஒரு சாம்பிள் தான். இது போல் நிறைய இருக்கு. எல்லாவற்றையும் எழுதினால் 5, 6 பகுதி வரும்.

      ஆமாம் இப்ப்பொழுது பெரும்பாலும் ஷேரிங் முறையில் தான் இருக்கிறார்கள். அனைவருக்கும் இதே பிரச்சனை தான்.

      நீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes