சிக்கன் டிக்கா ரோஸ்ட்



சிக்கன் டிக்கா ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
சிக்கன் டிக்கா மசாலா - 2 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 5
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை , கிராம்பு, ஏலக்காய் - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை - சிறிது

செய்முறை :

1.சிக்கனை சுத்தம் செய்து 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது ,சிக்கன் டிக்கா மசாலா, தயிர் சேர்த்து நன்கு பிசிறி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

2.சிக்கன் டிக்கா மசாலாவில் காரம், உப்பு எல்லாம் இருப்பதால் நாம் தனியாக எதுவும் சேர்க்க தேவையில்லை. முந்திரி ,தேங்காயை மைய விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3.வெங்காயத்தை மெல்லியதாகவும் ,மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.

4.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம்,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.



5. பின்னர் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்...

6. ஊற வைத்த சிக்கன் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.தனியே நீர் சேர்க்க தேவையில்லை.



7.சிக்கன் வெந்ததும் முந்திரி , தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்..மல்லிதழை தூவி பரிமாறவும்.




2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes