சேனைக்கிழங்கு பொரியல்


சேனைக்கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள் :

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. கிழங்கை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். பின்னர் தண்ணீரில் நன்கு அலசிக் கொள்ளவும்.


2. கிழங்குடன் தூள் வகைகள் , உப்பு சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்.


3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கிழங்கை சேர்த்து பிரட்டி விடவும்.


4.அடுப்பை சிம்மில் வைத்து நன்கு மொறுமொறுப்பாக வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.

இந்த பொரியல் தயிர் சாதம் ,வெரைட்டி ரைஸ்க்கு நல்ல பக்க உணவாக இருக்கும்.



2 கருத்துகள்:

  1. பிடித்த ரெசிபி... உங்களின் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. பதிவிற்க்கு நன்றி தனபாலன்.....
    செய்து பாருங்கள்..சுவை நன்றாக இருக்கும்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes