உருளை மசாலா


உருளை மசாலா

தேவையான பொருட்கள் :

உருளை - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. உருளையை வேகவைத்து தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக்      கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் , தக்காளி, பச்சை  மிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.



4. பின்னர் உருளையை சேர்க்கவும்.


5. தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


6. 1 கப் தண்ணீர் சேர்க்கவும்..மூடி போட்டு வேக விடவும்.


7.  எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.



சுவையான உருளை மசாலா தயார்.

பூரி, சப்பாத்திக்கு செய்ய ஏற்ற சைட்டிஷ்.

மல்லி புதினா பொடியாக நறுக்கி சேர்த்தால் மணமாக இருக்கும்.ஃப்ரோசன் பட்டாணி இருந்தால் 1/2 கப் சேர்க்கலாம்.
இவை இரண்டும் என்னிடம் அப்பொழுது இல்லை அதனால் சேர்க்கவில்லை.

4 கருத்துகள்:

  1. உருளை மசாலா செய்முறை, விளக்கப்படங்கள் இரண்டும் அருமை ஷமீ. எனக்கு காய்ச்சல், இருமல் என்று உடம்பை பாடாய் படுத்தி விட்டது. அதனால் தான் தங்கள் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை. இனி தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பூரி சப்பாத்திக்கு அருமையான காம்பினேஷன்

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கு ரொம்ப நன்றி சாரதாம்மா.

    உடம்பை பார்த்துகோங்க. பொங்கல் பிசியில் வரவில்லை என நினைத்து கொண்டேன்.

    எனது மற்ற பதிவுகளையும் நேரம் கிடைக்கும் பொழுது படித்து கருத்து சொல்லுங்க. ஐயம் வெயிட்டிங்..

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு ரொம்ப நன்றி ஜலீலா அக்கா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes