பட்டாணி சூப்

பட்டாணி சூப்


இந்த சூப் செய்முறை எனது தந்தை எனக்கு சொல்லி தந்தது..சமீபத்தில் தான் செய்து பார்த்தேன்..ருசி நன்றாக இருந்தது....
10 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம்..இதில் பட்டாணிக்கு பதில் அசைவம் விரும்புபவர்கள் சிக்கன் சேர்த்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
பட்டாணி (வேக வைத்தது) - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
ஜீரக தூள் - 1/2 ஸ்பூன்
சேமியா - 1/2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி, இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
3.பின்னர் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.
4.தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.  3 கப் தண்ணீர் சேர்க்கவும்.
5.கொதித்ததும் சேமியாவை அதில் சேர்த்து வெந்து மேலே வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய பட்டாணி சூப் தயார்...
மாலை வேளைகளில் பருக இதமாக இருக்கும்.


5 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes