கொத்து பரோட்டா

கொத்து பரோட்டா




தேவையான பொருட்கள் : 

பரோட்டா - 4
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
கோழி குருமா - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
முட்டை - 2
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1.பரோட்டாவை சுட்டு சிறு சிறு துண்டுகளாக்கி மிக்சியில் விப்பரில் 2 சுற்று சுற்றி எடுக்கவும்.
2.வெங்காயத்தை மெல்லியதாகவும், பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கி கொள்ளவும். கேரட்டை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
3.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் , மிளகாய் , கேரட் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4.கோழி குருமா, தூள் வகைகள் , உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை பிரட்டவும்..கடைசியாக முட்டை உடைத்து ஊற்றி கொத்தி விடவும்.
5.உதிர்த்து வைத்துள்ள பரோட்டாவை மசாலாவில் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
6.பரிமாறும் முன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

எளிதில் செய்ய கூடிய சுவையான கொத்து பரோட்டா தயார்.
லன்ச் பாக்சுக்கு ஏற்ற சிற்றுண்டி.

போன்லெஸ் சிக்கன் , மற்ற காய்கறிகள் சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும்.
காலையில் செய்த பரோட்டா , கோழி குருமா இருந்தால் இரவு டிபனாக இப்படி செய்யலாம்.



3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes