ஃபிஷ் ஃப்ரை

ஃபிஷ் ஃப்ரை




தேவையான பொருட்கள் :

மீன் - 4 துண்டுகள்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஸ்பைசி ப்ரெட் க்ரம்ப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

1. மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு அலசி கொள்ளவும்.
2. பின்னர் மீனுடன் மஞ்சள் தூள் , மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது , உப்பு, எலுமிச்சை சாறு கலந்து நன்கு பிரட்டி ப்ரிட்ஜில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.


3.பானில் எண்ணெய் ஊற்றி சூடானது ஊறிய மீன் துண்டுகளை ப்ரட் க்ரம்ப்சில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.



4.மொறு மொறுப்பான ஃபிஷ் ஃப்ரை  தயார்.



சிக்கன் மசாலாவில் மீன் பொரித்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

சூடான சாதத்துடன் பக்க உணவாக பரிமாறலாம்.

6 கருத்துகள்:

  1. வாழ்த்திற்க்கு மிக்க நன்றி ஜலீலா அக்கா...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்திற்க்கு மிக்க நன்றி ஆசியா அக்கா...
    எல்லாம் நீங்க குடுத்த ஊக்கம் தான் :)

    பதிலளிநீக்கு

  3. அருமையாக சமையல் பக்கம் அறிந்து கொண்டேன் மிக்க
    மகிழ்ச்சி தோழி .இந்நாள் எனக்கு ஒரு பொன் நாளே .வாழ்த்துக்கள் நட்பில் இணைந்திருப்போம் இனி எந்நாளும் வருவேன் பல் சுவை உணவைக் கண்டு ருசிக்க .மிக்க நன்றி தோழி பகிர்வுகளுக்கு .

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி..
    எனக்கும் உங்களை போன்ற தோழிகள் கொடுக்கும் உற்சாகம் தான் மேன்மேலும் வளர ஊக்கபடுத்துகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes