கடாய் சிக்கன்



ஞாயிறுக்கிழமைக்களில் எல்லோர் வீட்டிலும் ஸ்பெஷல் மெனு தானே..
இன்று எங்கள் வீட்டு மெனு.
நெய் சாதம்
தால்ச்சா
கடாய் சிக்கன்
மாங்காய் பச்சடி
ரவா கஞ்சி (இனிப்புக்கு).
கடாய் சிக்கன் குறிப்பை இப்பொழுது பகிர்கிறேன்.மற்ற குறிப்புகள் பிறகு பதிவிடுகிறேன் :)


கடாய் சிக்கன்

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலொ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு , ஏலக்காய் - தலா 2

செய்முறை :

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2. சுத்தம் செய்த சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, 1/4 கப் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு சேர்த்து பிரட்டி ப்ரிட்ஜில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.
4. பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
5. ஊறிய சிக்கன் கலவையை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும்..பாதி வெந்ததும் மீதியுள்ள தயிரை சேர்த்து சிம்மில் வைத்து விடவும்.


6. சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மிளகு தூளை தூவி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
நான் இதற்க்கு ப்ரெஷ் மிளகு தூள் சேர்த்துள்ளேன்..


கம கம வாசனையுடன் கடாய் சிக்கன் தயார்.


இது பிரியாணி, நெய் சாதம் ஆகியவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.
பரோட்டா, நாண், சப்பாத்தி போன்றவற்றுக்கும் பக்க உணவாக பறிமாறலாம்.

1 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes