முட்டை குருமா



முட்டை குருமா

தேவையான பொருட்கள் : 

வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
முட்டை - 2
தேங்காய் பால் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணைய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்..பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்..
2.சட்டியில் எண்ணைய் விட்டு காய்ந்ததும் பட்டை ,கிராம்பு சேர்க்கவும்..



3.பின்னர் வெங்காயம் ,பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்...வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்...பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்...



4.அதன் பின்னர் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , பெருஞ்சீரகத் தூள்,  கறிவேப்பில்லை சேர்க்கவும்...



5.தேங்காய் பாலில் மல்லி தூள் , உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்..
இதனை சட்டியில் ஊற்றி மூடி 5 நிமிடம் கொதிக்க விடவும்...



6.கொதி வந்ததும் 2 முட்டைகளையும் அதில் உடைத்து ஊற்றவும்...



7.பின்னர் சட்டியை மூடி 5 நிமிடம் கொதித்து எண்ணைய் பிரிந்து வந்ததும் இறக்கவும்...
சுவையான முட்டை குருமா தயார்..
இது சாதம் , ஆப்பம் , சப்பாத்தி , பரோட்டா அனைத்திற்கும் ஏற்றது...




5 கருத்துகள்:

  1. செய்து பார்ப்போம்... செய்முறைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. முட்டை குருமா சூப்பரா இருக்கு ஷம!!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும், கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ தனபாலன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், கருத்திற்க்கும் மிக்க நன்றி தோழி...

    பதிலளிநீக்கு
  5. மனமார்ந்த வாழ்த்துக்கள்,masha Allah
    very nice recipe thanks sister

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes