மீ கொரிங்





மீ கொரிங்

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் - 2 பாக்கெட்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய்- 1
பட்டாணி - 1/2 கப்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
(அல்லது)மேகி மசாலா பாக்கெட் - 2
உப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஹாட் டாக் - 2
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மல்லிதழை, புதினா சிறிது.

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.மிளகாயை நடுவில் கீரி வைக்கவும். 

2. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யில் பாதி  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.மொறுமொறுப்பாக இருக்க வேன்டும்.



3. நூடுல்ஸை 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டி கொள்ளவும். ஹாட்டாகை கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

4. கடாயில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




5. ஹாட்டாகையும், பட்டாணியையும் சேர்த்து கிளறி விடவும் மேகி மசாலா சேர்க்கவும்.




6. பின்னர் சாஸ் வகைகள் சேர்த்து நூடுல்ஸையும் சேர்த்து பிரட்டி அடுப்பில் 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.




ஹாட்டாக் சேர்க்க விரும்பாதவர்கள் கேரட் குடமிளகாய் சேர்க்கலாம் அல்லது முட்டை சேர்க்கலாம்.
முட்டை சேர்க்கும்பொழுது கடைசியாக கொத்தி விட்டு சேர்க்கவும்.

இறுதியில் ஃப்ரைட் ஆனியன் தூவி பரிமாறவும்.




சிங்கப்பூர் ஸ்பெஷல் மீ கொரிங் தயார்.



4 கருத்துகள்:

  1. மீ கொரிங் பதிவு மிக அருமை.
    சமீ வருகின்ற 6th எனது blog 3rd anniversary ! அன்றைய பதிவு அசோகா அல்வா ! நீங்கள் எனது வலைப்பூவுக்கு கண்டிப்பாக வருகை தாருங்கள். Advance Thanks

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பதிவுக்கும் நன்றிமா.
    அவசியம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. மீங்கோரிங் இதில் என்ன ஸ்பெஷல், இது வழமையாக் செய்யும் நூடுல்ஸ் போல தான் இருக்கு,ஹாட்டாக் சேர்ப்பதா?/

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes