ரங்ஸின் திருவிளையாடல்-1

எல்லா ப்ளாக்கரும் ரங்கமணியை பற்றி எழுதும் போது நாமும் நம் ரங்ஸின் அருமை பெருமைகளை நான்கு வார்த்தை சொன்னால்தானே அவரின் புகழ் எல்லோருக்கும் தெரியும்..
(மைண்ட் வாய்ஸ்: நானா சொன்னால்தான் உண்டு..)

இது சமீபத்தில் நம்ம ரங்ஸின் திருவிளையாடல்..

வீட்டு வேலைகளில் என்னவர் உதவுவார் என்றாலும் சமையல் வேலை அவருக்கு ஆகாத ஒன்று...
சாம்பார் வைக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னாலும் காதிலே வாங்க மாட்டார்.
(மைண்ட் வாய்ஸ்: இவருக்கு நன்கு கறி வைக்க தெரிந்தால் தானே நாம் இவர் வீட்டிற்கு சீக்கிரம் வரும் நாட்களில் சமைக்க சொல்லலாம் என்று ப்ளான் பண்ணினது அவருக்கு தெரிஞ்சுடுச்சு போல...)
அப்படியும் சில நேரங்களில் செய்ய வேண்டாம் சும்மா பார்த்துக் கொண்டாவது இருங்கள் என்பேன்.அப்பொழுது கூட சாம்பாருக்கு எவ்வளவு மா இஞ்சிபூண்டு போடணும் என்று இஞ்சி பூண்டு பாக்ஸோடு கேக்கும்போது எனக்கே குழம்பி விடும்.இதுக்கு அந்த பாடாவதி லாப்டாப்பே பாருங்கள் என்று அனுப்பிவிடுவேன்.
திங்கள் செவ்வாய் போன்ற தினங்களில் அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும் என்பதால்(மைண்ட் வாய்ஸ்: ஒரு பதிவு கூட படிக்க முடியாது...)அன்று மட்டும் இரவு உணவுக்கு தோசை அல்லது ஆப்பம் தான்..
வீட்டிற்க்கு வந்ததும் ரங்ஸ் ஆரம்பிப்பதற்கு முன்னரே இன்னைக்கு செம வேலை மா..நீங்க கொஞ்சம் தோசை ஊத்துறீங்களா என்று அப்பொழுது தானே சொல்ல முடியும்.(இதுல டைமிங் ரொம்ப முக்கியம், அவரு சொல்றதுகுள்ள சொல்லிடனும் இல்லனா நம்ம தான் ஊத்தணும்).

எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ போறேன்.சரி விஷயத்துக்கு வருவோம்.

ஒரு சனி இரவு அரிசி உளுந்து ஊற வைத்து விட்டு தூங்கி விட்டேன்.
மறுநாள் காலை மாவு அரைக்கும் சமயத்தில் என்றும் இல்லாத அதிசயமாய் ரங்ஸ் பாய்ந்து வந்து (நிஜமாவே அப்படிதான் வந்தார்)நான் அரைக்கிறேன் நீ வேறு வேலை இருந்தால் பார் என்றார். அவருக்கு மாவு அரைப்பதில் அனுபவம் இருந்ததால் நானும் காலையிலே மாவு அரைக்கும் தொல்லையிலிருந்து விடுதலை என்று உற்சாகத்துடன் வீட்டிற்கு கீழே இருக்கும் வெட் மார்க்கெட்ற்கு போனேன்.


அங்கு ஒரு கடையில் ஃப்ரெஷ் தேங்காய் நம் கண் முன்னரே துருவி தருவார்கள்.அது வாரம் ஒருமுறை வாங்குவேன்.இந்த முறை வாங்கும் போது அரிசி நிறைய ஊற வைத்து இருக்கிறோமே எதற்கும் தோசை 3 நாட்களாவது வரும்..தினம் சட்னி செஞ்சே ஓட்டிடணும் என்று நிறையவே வாங்கி கொண்டேன்..(மைண்ட் வாய்ஸ் : பேரம் பேசி வாங்கியதில் அல்ப சந்தோஷம் வேறு.எங்கு போனாலும் நம்ம ஊரு புத்தி மட்டும் மாற மாட்டேங்குது).

கதவை திறந்த ரங்ஸ் ஏன் இவ்வளவு அரிசி நான்கு நாளைக்காவது வரும்.உனக்கு சப்பாத்தி செய்ற வேலை மிச்சம் என்று வேறு சொன்னார்.அதனால் தானே நிறைய தேங்காய் வாங்கிட்டு வந்துருக்கேன் என்று மனதிற்குள் சந்தோஷ பட்டுக் கொண்டேன்.

சிறிது நேரம் ரங்ஸ் வாயே திறக்காமல் தீவிர யோசனையில் இருந்தார்.திடீரென்று சமீ உனக்கு அம்மியில் சட்னி செய்ய தெரியுமா என்று கேட்டார்.
(கவனிக்க: நாங்கள் இருக்கும் வீட்டில் அம்மிக்கல் உண்டு..)

நான் out of syllabus இல் வரும் கேள்வியை பார்த்தால் முழிப்பது போல் முழித்தேன்.
எனக்கு அதெல்லாம் தெரியாது எதற்கு கேக்குறீங்க என்று அப்பாவியாய் கேட்டேன்..மிக்சி ஸ்ட்ரக் ஆயிடுச்சு போல மாவு அரைத்ததிலிருந்து ஓடல மா என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.நான் உடனே இதென்ன பெரிய விஷயமா லோட் அதிகமானதால் இருக்கும் அதெல்லாம் நான் சரி செஞ்சுடுவேன் என்று மிக்சியை கவிழ்க்க போக அதெல்லாம் செஞ்சுடேன் பட் நோ யூஸ் ரன் ஆகலை என்று கூலா சொல்றார்.

அதுக்குதான் அம்மி அரைக்க தெரியுமா என்று கேட்டீங்களா என்று அவ்வார சண்டையினை வெற்றிகரமாக துவக்கினேன்.

1/2 மணி நேர காரசாரமான சண்டைக்கு பிறகு ரங்ஸ் எனக்கு பிரச்சனையில்லை நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன் உனக்கு தான் சட்னி இல்லையென்றால் இறங்காது என்று பந்தாவாக சொல்லிவிட்டு குளிக்க போயிட்டார்.

எனக்கு தோசை மாவை நினைத்து கவலைப்படுவதா (அவ்வளவு மாவு...........)மிக்சியைசரி செய்வதா தேங்காயை நினைப்பதா என்று குழம்பி விட்டேன்.
அதிலும் ஒரு சில சந்தோசம் இருக்கத்தான் செய்தது.

1. ஒரு வாரம் ரங்ஸை திட்ட ஒரு காரணம் கிடைத்தது.
2. ரொம்ப நாளாக காலியாகாமல் இருந்த இட்லி பொடி காலி ஆனது.
3. கடைசி நாள் மாவு புளிக்கிறது என்றதால் (நான் கிளப்பியதுதான் அவர் சொல்லவில்லை)ஹோட்டலில் சாப்பிட்டது என்று பல நன்மைகள்.

இதனால் சொல்லப்படும் நீதி என்னவென்றால் மிக்சி கிரைண்டர் ரிப்பேரானால் டென்ஷன் படுவதை விட்டு விட்டு கிடைக்கும் இது போன்ற சந்தோஷங்களை அன்பவிங்க..

இந்த மாபெரும் மொக்கை பதிவை படிச்சதுக்கு நன்றி..(பாதி படிச்சுட்டு எஸ் ஆனாலும் நன்றி தாங்க.....)

ரங்ஸின் திருவிளையாடல்கள் தொடரும்.....

3 கருத்துகள்:

  1. //நீதி என்னவென்றால் மிக்சி கிரைண்டர் ரிப்பேரானால் டென்ஷன் படுவதை விட்டு விட்டு கிடைக்கும் இது போன்ற சந்தோஷங்களை அன்பவிங்க..//

    ஹா ஹா.. அருமையான நீதி... கிச்சனில் சிங்க் ப்லாக் போன்ற விஷயங்களையும் சேர்த்துக்கங்க.... :)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா இதுவும் அப்போ லிஸ்ட்ல சேர்த்துக்க வேண்டியது தான்..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானு..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes