நலம் விசாரிச்சா தப்பா?



நலம் விசாரிச்சா தப்பா?

நான் என் கொழுந்தனார் திருமணத்திற்காக இந்தியா சென்ற பொழுது நடந்த விஷயம்தான் இது..

நான் பரிசத்திற்க்கு (நிச்சயதார்த்தம்) முதல் நாள் தான் இந்தியா சென்றேன்.

பரிசம் அன்று எங்கள் உறவினர் ஒருவரிடம் நலம் விசாரித்தேன்.அவரது மகள் என் கணவரின் நெருங்கிய நண்பரின் மனைவி.

ஆனால் அவரை நான் திருமணமான நான்கு வருடங்களில் சந்தித்ததே இல்லை.
நாங்கள் விடுமுறைக்கு வரும் சமயம் அவர்கள் துபாயிலும் அவர்கள் இந்தியா வரும் பொழுது நாங்கள் சிங்கையிலும் இருப்பது போல் தான் இருந்தது.

இந்த முறை அவரும் இந்தியா வந்திருப்பதாக என் கணவர் கூறினார்.

அவரது அம்மா பரிசத்திற்கு வந்த பொழுது நலம் விசாரித்தபடி ஆயிஷா எப்படி இருக்கிறார்?அவரையும் பரிசத்திற்க்கு அழைத்து வந்திருக்கலாமே நான் இந்த முறையாவது அவரை பார்க்கலாம் என்றிருந்தேன் எனக் கூறினேன்.

அவ்வளவுதான் அவருக்கு பயங்கர கோபம் வந்து விட்டது.ஏன் உன் மாமி என்ன என் மகளை பரிசத்திற்கா அழைத்தார்கள் வருவதற்கு?நீ ஆசையா கேட்கிறாயே அவர்களிடம் போய் கேள் ஏன் ஆயிஷாவை அழைக்கவில்லை என என்று கோபமாக பொரிந்து தள்ளினார்.

நேரம் பார்த்து என் மாமியாரும் அந்த பக்கம் வந்தார்.
அவருக்கு இதை கேட்டு டென்ஷனாகி பதிலுக்கு பேச ஆரம்பித்து விட்டார்.

எனக்கு தான் என்ன செய்வதென்றே புரியவில்லை..இதென்னடா நலம் விசாரிக்க போய் வம்பை விலைக்கு வாங்கி விட்டோமோ என்று?

இப்பொழுது மாமி கோபப்பட்டால் என்ன செய்வது என்று வேறு பயம்.அவர் சும்மாவே அதிகம் டென்ஷன் ஆவார். திருமணம் போன்ற விழாக்களில் கேக்கவா வேண்டும்?

ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்து உறவினர் சாப்பிட சென்றார் மனத்தாங்கலுடன் தான்.

என் மாமி நான் இன்னும் நலம் விசார்க்க போய் என்னென்ன வம்பை விலைக்கு வாங்குவேனோ என்ற பயத்தில் என் கையை இறுக்கமாக பற்றி "வா சமீ உனக்கு பெண் வீட்டுகாரர்களை அறிமுகம் செய்து வைக்கிறேன் அவர்களும் உன்னை கேட்டு கொண்டேயிருக்கிறார்கள்" என்று கையோடு கூட்டி சென்று விட்டார்.

திட்டு கிடைக்குமோ என்ற பயத்தில் இருந்த நானும் எஸ் ஆகி விட்டேன்.

இந்த கூத்தை உடன் இருந்து கவனித்த என் கணவரின் அண்ணன் மனைவிக்கு சிரிப்போ சிரிப்பு.திருமணம் முடிந்த பின் எல்லாரிடமும் சொல்லி செம காமெடி பண்ணி விட்டார்.

இப்போ சொல்லுங்க நலம் விசாரிச்சா தப்பா??


5 கருத்துகள்:

  1. நீங்கள் நலம் விசாரித்தது தப்பு இல்லை ஷமி. சில நேரங்களில் இப்படி ஆகி விடுகிறது. உங்கள் பதிவை வாசித்ததும் நானும் ஜாக்கிரதையாய் இருக்கணும் போல !

    பதிலளிநீக்கு
  2. காரணம் தெரியாமல் நீங்கள் விழித்ததை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. நானும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கவனமாக தான் இருக்கிறேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா...

    பதிலளிநீக்கு
  4. என் கணவர் இதை வைத்து இன்னமும் கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானு...

    பதிலளிநீக்கு
  5. எப்படா இது போல வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes