ரவா தோசை




சின்ன வயசுல இருந்தே எங்க ஊர் காளியாகுடி ஹோட்டல் ரவா தோசைக்கு நான் பயங்கர விசிறி.

அப்புறம் அம்மா சுடுற ரவா தோசையும் நல்லா இருக்கும்.
இருந்தாலும் ஹோட்டல்ன்னா 3 வகை சட்னி, சாம்பாரோட செமையா இருக்கும்ல.

என்னவரும் அதே ஹோட்டல் தோசைக்கு அடிக்ட்ன்னு அப்புறம் தான் தெரிஞ்சுது.

ஊரில் என் மாமியார் வீட்டில் அடிக்கடி ரவா தோசை செய்வாங்க.என் கொழுந்தனார் மனைவி அதில எக்ஸ்பர்ட்.நான் சைட்டிஷ் செய்யறதோட நிறுத்திப்பேன்.

சிங்கை வந்ததுல இருந்து நான் எங்க ஊர் ஷ்பெஷல் தோசையை ரொம்ப மிஸ் பண்ணினேன்.

இங்கயும் எந்த வெஜ்-ஹோட்டல் போனாலும் மனசு வேற சாப்பிட நினைச்சாலும் வாய் தானாகவே ரவா தோசைன்னு சொல்லிடுது.
இல்ல கொஞ்சம் யோசிக்கலாம்ன்னு பார்த்தா என் கணவர் ரவா தோசைத்தானேனு அவர் ஆர்டர் பண்ணிடுறார்.வேற வழி?????

எங்க சாப்பிட்டாலும் நம்ம ஊர் ருசி வரலைன்னு சரி நாமளே என் செய்ய கூடாதுன்னு நினைக்க ஆரம்பிச்சேன்.

நம்ம கதை தான் தெரியுமே.இதுக்காகவே ஆஃபிஸில் உட்கார்ந்து எல்லா ப்ளாக்ஸும் பார்த்து கனவுல எழுப்பினாலும் மனப்பாடமா சொல்ற அளவுக்கு தோசை சுட ரெடி ஆனேன்.

நம்ம ரங்ஸ் வேற ட்ரையல்னா இன்னொரு நாள் பாரு பசியோட வரும் போது விளையாடாதன்னு மறைமுகமா எதிர்ப்பை தெரிவிச்சதுனால செய்ய துணிவு வரலை.

இந்த வாரம் நண்பர் குடும்பத்தோட பிக்னிக் போனோம்.
இரவு வர லேட் ஆகும் அதனால ஏதாவது  மாவு ரெடி பண்ணி வச்சுடுனு ரங்ஸ் சொன்னார்.

நானும் உளுந்து அடை செய்யலாம்ன்னு உளுந்து மாவு மட்டும் ரெடி பண்ணி வச்சுட்டு கிளம்பிட்டேன்.

ரங்ஸ் பிக்னிக் முடிஞ்சு வரும் பொழுது என்ன டின்னர்னு கேட்டதுக்கு உளுந்து அடைன்னு சொன்னேன்.உடனே எனக்கு போன தடவையே அது சாப்பிட பிடிக்கலைன்னு (???) சொன்னார்.

சரி அத நம்ம ரவா தோசையா மாத்திடலாம்ன்னு ஒரு திட்டத்தோட வந்தேன்.அரிசி மாவு தான் சேர்க்கணுமா என்ன அப்படின்னு நானே சமாதானம் ஆயிட்டேன்.

உடனே அவசரமா தக்காளி சட்னி ரெடி பண்ணிட்டு அதே சமயம் உளுந்து மாவு பாதி போட்டு, ரவா கொஞ்சம் சேர்த்து உப்பு தயிர் எல்லாம் சேர்த்து கலந்து வச்சேன்.

அப்புறமும் உளுந்து வாசமே வந்தது சரின்னு கொஞ்சம் கோதுமை ரவா சேர்த்தேன்.இப்படியாக ஒர் சட்டி மாவு கரைத்து விட்டேன்.

ரங்ஸை உட்கார சொல்லி தோசை ஊத்தினா கல்லை விட்டு வரவே இல்லை.
அப்புறம் தான் தெரிஞ்சுது 2 நாள் முன்னாடி தோசைக்குனு பழக்கின கல்லுல அவசரத்துல சப்பாத்தி சுட்டது.

உடனே நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து அதில ஊத்தினா இங்கயும் அதே கதை தான்.

என்னவர் டென்ஷனாகி நான் ஊத்துறேன் நீ சூடு வரும் முன்பே ஊத்தினா எப்படி வரும்னு ஊத்தினா திரும்பவும் அதே கதை தான்.

அதுக்குள்ள வெங்காயம், உப்பு எல்லாம் போட்டு கல்லை வேற சரிப்படுத்துறேன்.

அப்புறம் தான் சொன்னார் கல்லு நல்லா தான் இருக்கு உன் மாவுல தான் பிரச்சனை.

ரங்ஸ் வேற சீக்கிரம் சொல்லு கீழே ஃபுட்கோர்ட் மூடுறதுகுள்ள ஏதாவது சாப்பிட வாங்கவான்னு கேட்டு கடுப்படிக்கிறார்.

உடனே வேகமா யோசிச்சு மீந்த உளுந்து மாவுல தேங்காய், முட்டை எல்லாம் சேர்த்து உளுந்து அடை செஞ்சு சாப்பிட்டாச்சு.

அவ்வளவு மாவு வீணா கீழே கொட்ட மனசே வரலை.எதற்கும் இருக்கட்டும்னு ஃபிரிட்ஜில வச்சேன்.

காலையில எடுத்து பார்த்தா மேல தண்ணீர் தெளிஞ்சு இருக்கு.
உடனே அதை வடிச்சுட்டு துருவிய கேரட், பட்டாணி எல்லாம் சேர்த்து கடுகு முந்திரி எல்லாம் தாளிச்சு போட்டு ரவா இட்லியா ஊத்தியாச்சு.
நானே நம்பலப்பா.சூப்பரா வந்துருக்கு இட்லி.

தக்காளி சட்னி,பொடியோட  சாப்பிட நல்லா இருந்தது.
இந்த சந்தோஷத்துல போட்டோ எடுக்க மறந்துட்டேன் .

ரங்ஸுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் காலைல இட்லி சட்னியோட சூப்பர் ப்ரேக்ஃபாஸ்ட்.
எப்படியோ ரவா தோசைக்கு ஆசைப்பட்டு ரவா இட்லி சாப்பிட்டு வார இறுதியை கொண்டாடியாச்சு.
இந்த மொக்கையை படித்தவர்களுக்கு ரொம்ப்ப்ப்ப்ப நன்றி......

* படத்துல இருக்குற ரவா தோசை கூகிள்ல சுட்டது.





4 கருத்துகள்:

  1. நானும் முயற்சிக்கிறேன். ஆனா நல்லா இல்ல ,,,,,,,, நீங்க தான் பொறுப்பு சொல்லிப்புட்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சொதப்பல்களைத் தைரியமாகக் கூறியுள்ளீர்கள்.. வாழ்த்துகள் :P

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி.முயற்சி செய்து பாருங்க நன்றாக தான் இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானு.அப்போ அப்போ சொதப்பினா தானே நாம எக்ஸ்பர்ட் ஆக முடியும்....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes