தக்காளி பச்சடி



தக்காளி பச்சடி

இது என்னுடைய 50ஆவது பதிவு.

அதனை ஒரு இனிப்புடன் கொண்டாடுவோம் .
அதனால் சுலபமா செய்ய கூடிய ஒரு இனிப்பு வகை உங்களுக்காக.

தேவையான பொருட்கள் : 

பழுத்த தக்காளி - 4
சீனி - 1/2 கப்
முந்திரி - 10
பட்டை - 1 துண்டு
உப்பு - 1/4 ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. தக்காளியை நறுக்கி கொள்ளவும்.முந்திரியை சிறியதாக வெட்டி வைக்கவும்.
2. சட்டியில் நெய் விட்டு சூடானதும் பட்டை சேர்த்து முந்திரியை சேர்க்கவும்.சிவற விட வேண்டாம்.

3. தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.


4. தக்காளி வதங்கியதும் சீனி சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.


5. சீனி முழுவதும் கரைந்து சிவப்பாக பிசுபிசுப்பான பதம் வரும் பொழுது இறக்கவும்.

சுவையான தக்காளி பச்சடி தயார்.

இதனை நெய் சோறு, தால்ச்சா செய்யும் பொழுது சைட்டிஷ் ஆக பரிமாறலாம்.
பிரியாணியுடனும் சாப்பிடலாம்.(நான் சப்பாத்திக்கு, ப்ரெட்க்கு கூட தொட்டு சாப்பிடுவேன் ஜாமை விட செம டேஸ்ட்).

* தக்காளியை சுடுநீரில் வேக விட்டு தோலை உரித்து விட்டு வதக்கி செய்தாலும் ருசியாக இருக்கும்.

* இது கொஞ்சம் எளிதான செய்முறை என்பதால் இப்படி செய்வது.
பழுத்த தக்காளியாக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.

* விரும்பினால் சிவப்பு ஃபுட் கலர் சேர்க்கலாம்.நான் சேர்க்காமல் தான் செய்துள்ளேன்.

* நான் குடுத்துள்ள அளவில் பாதி போட்டு தான் செய்துள்ளேன்.இங்கு குடுத்துள்ள  அளவு 4 பேருக்கானது.


7 கருத்துகள்:

  1. 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஷமீ. தக்காளி பச்சடி இனிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. அல்ஹம்துலில்லாஹ் பாக்கவே நல்லா இருக்கு நான் கொஞ்சம் மிளகாய் தூள் சேர்ப்பேன்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்திற்கும் , கருத்து தெரிவித்ததற்கும் மிக்க நன்றி சாரதாம்மா , பல்கிஸ் & ஆசியா அக்கா.

    பதிலளிநீக்கு
  4. முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி மகி.

    நான் உங்கள் பிளாக்கை ரொம்ப நாளா பார்வையிடுவேன்.

    தக்காளி பச்சடி செய்து பாருங்க..சுவை நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes