ப்ரோக்கோலி சிக்கன் ஃப்ரை


ப்ரோக்கோலி சிக்கன் ஃப்ரை
தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - 1
வெங்காயம் - 1
சிக்கன் - 100 கிராம்
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
சிக்கன் 65 மசாலா - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி, புதினா - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. ப்ரோக்கோலியை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும்.சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து    வெங்காயம் சேர்க்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை  போகும் வரை வதக்கவும்.

4. பின்னர் ப்ரோக்கோலி , சிக்கனை சேர்த்து வதக்கவும்.


5. சிக்கன் 65 மசாலா  சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.மூடி போட்டு வேக விடவும்.

6. 5 நிமிடத்தில் வெந்து விடும்.


மிகவும் எளிதில் செய்யக் கூடிய சத்தான ப்ரோக்கோலி சிக்கன் ஃப்ரை ரெடி.அனைத்து சாத வகைகளுடனும் சைட்டிஷ் ஆக சாப்பிடலாம்.


ப்ரெட்டில் இந்த ஃப்ரையை வைத்து சாண்ட்விச் போல்  சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

4 கருத்துகள்:

  1. ப்ரோக்கோலி சிக்கன் ப்ரை செய்முறை சூப்பர். இந்த தடவை புகைப்படங்களும் அருமையாக இருக்கு. தொடருங்கள் ஷமீ.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு மிக்க நன்றி அம்மா.
    என்னவர் போனில் போட்டோ எடுத்தேன்.அது தான் தெளிவாக இருக்கும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. புரோக்கலி + சிக்கன் புது காம்பினேஷன்.. ட்ரை பண்றேன்.

    பதிலளிநீக்கு
  4. செஞ்சு பாருங்க அபிநயா நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes