சிக்கன் கொத்து பரோட்டா




சிக்கன் கொத்து பரோட்டா

தேவையான பொருட்கள் : 

பரோட்டா - 4
போன்லெஸ் சிக்கன் - 100 கிராம்
வெங்காயம் - 2
பச்சை குடைமிளகாய் - 1/2
சிவப்பு குடைமிளகாய் - 1/2
கேரட் - 1
ஃப்ரோசன் பட்டாணி - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
புதினா - சிறிது
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 
1.பரோட்டாவை சுட்டு நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக்கி வெட்டி கொள்ளவும்.


2.வெங்காயத்தை மெல்லியதாகவும், குடைமிளகாயை பொடியாகவும் நறுக்கி கொள்ளவும். கேரட்டை மெல்லிய துண்டுகளாக சீவி கொள்ளவும்.


3.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் ,உப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் சிறிதாக நறுக்கிய சிக்கன், மிளகாய் , கேரட், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.



4.தயிர் , தூள் வகைகள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை பிரட்டவும்..


5.வெட்டி வைத்துள்ள பரோட்டாவை மசாலாவில் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.வேண்டுமென்றால் சிறிது நீர் தெளிக்கலாம்.


6.கடைசியாக புதினா சேர்க்கவும்.



2 முட்டைகளை தனியாக கொத்தி கூட சேர்க்கலாம்.சுவையாக இருக்கும்.

விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து அசத்தலாம்.லன்ச்க்கும் சாப்பிட நன்றாக இருக்கும்.


4 கருத்துகள்:

  1. ஹைய்யோ பார்க்கவே ஆசையா இருக்கு. அந்த பிளேட்ட இங்க அனுப்புங்க

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நன்றி அபிநயா..எங்க வீட்டுக்கு வாங்க செஞ்சே தர்றேன்.

    பதிலளிநீக்கு
  3. பாராட்டிற்க்கு ரொம்ப நன்றி சாரதாம்மா...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes