காடை ரோஸ்ட்


காடை ரோஸ்ட்  

தேவையான பொருட்கள் :

காடை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - 1 ஸ்பூன்
தேங்காய்பால்  - 1/2 கப் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - தலா 1

செய்முறை : 

1. காடையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2. சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை, கிராம்பு,  ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.


4. காடையை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு தூள் வகைகள், தயிர் சேர்க்கவும்.


5. தேங்காய்பால் சேர்த்து காடையை 10 நிமிடம் வேக விடவும்..


6. காடை வெந்து எண்ணெய் பிரிந்து மசாலா நன்கு கெட்டியாக வரும் பொழுது அடுப்பை அணைக்கவும். மல்லிதழை தூவி பரிமாறவும்.


காடை ரோஸ்ட் தயார்.

நெய்சோறு, பரோட்டா இவற்றுடன் சாப்பிட பொருத்தமான சைட்டிஷ். 

விரும்பினால் 10 முந்திரியை சேர்த்து அரைத்து ரோஸ்டில் சேர்க்கலாம். இது நன்கு ரிச் டேஸ்டுடன் இருக்கும்.

3 கருத்துகள்:

  1. காடை ரோஸ்ட் அருமை ஷமீ. ஒரே அசைவ பதிவுகளா போட்டு அசத்துதீங்க!

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுக்கு ரொம்ப நன்றி மா.

    இனிமே ஒன்றிரண்டு சைவ பதிவுகளும் வரும். உங்க தேங்காய் பர்பி இன்று செய்ய போகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தேங்காய் பர்பி இன்று செய்வது குறித்து சந்தோஷம் ஷமீ. நன்றாக இருந்தால் எனது தேங்காய் பர்பி பதிவில் மீண்டும் வந்து பின்னூட்டம் கொடுங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes