ஸ்பைசி சிக்கன் மக்ரோனி


ஸ்பைசி சிக்கன் மக்ரோனி 

தேவையான பொருட்கள் :

மக்ரோனி  - 1 பாக்கெட் 
போன்லெஸ் சிக்கன் துண்டுகள் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய்  - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
பட்டை - 2 துண்டு 
கிராம்பு  - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை, புதினா   - 1/2 கப்
முந்திரி - 6

செய்முறை :

1. மக்ரோனியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மெல்லியதாகவும்  பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.

2. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

3. பின்னர் இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி கோழி துண்டுகள், தக்காளி போன்றவற்றை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


4. தக்காளி குழைந்ததும் தூள் வகைகள், தயிர் சேர்த்து கோழியை வேக விடவும்.


5. பின்னர் உடைத்த முந்திரி, மல்லிதழை, புதினா சேர்த்து பிரட்டி விட்டு 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.


6. கோழி வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மசாலாவில் மக்ரோனியை
 சேர்க்கவும். 

7. 5 நிமிடம் சிம்மில் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

ஸ்பைசி சிக்கன் மக்ரோனி ரெடி.



* கோழி பிடிக்காதவர்கள் கேரட், குடைமிளகாய் போன்ற காய்கறிகள் சேர்த்து செய்யலாம்.


* கடைசியாக ஒரு முட்டையை கொத்தி விட்டு மக்ரோனியில் சேர்க்கலாம்.

2 கருத்துகள்:

  1. ஸ்பைசி சிக்கன் மக்ரோனி சுவை அருமையாக இருந்தது, படத்தில் ஸ்பூனோடு வைத்திருப்பதால் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டேன் ஷமீ.

    பதிலளிநீக்கு
  2. ஸ்பூன் என்ன ப்ளேட்டோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes