ஈரல் பொரியல்


ஈரல் பொரியல்

தேவையான பொருட்கள் : 

ஆட்டு ஈரல் - 1/4 கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
மல்லிதழை, புதினா  - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. ஈரலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி தூள் வகைகள், உப்பு  சேர்த்து பிசிறி வைக்கவும்.




2. தக்காளி, மிளகாயை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளி, மிளகாய்  சேர்த்து வதக்கி இஞ்சிபூண்டு சேர்க்கவும்.

4. பச்சை வாசம் போனதும் ஈரல் கலவையை சேர்த்து வேக விடவும்.  மல்லிதழை, கறிவேப்பிலை  சேர்க்கவும்.


5. வேண்டுமென்றால் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிரட்டி விடவும்.

6. 5 நிமிடத்தில் வெந்து எண்ணெய் பிரிந்து வந்து விடும்.

சத்தான ஈரல் பொரியல் தயார்.

ஈரல் இரத்த விருத்திக்கு மிகவும் நல்லது.

3 கருத்துகள்:

  1. ஈரல் பொரியல் அருமையா இருக்கு ஷமீ. நாங்கள் ஒரு வாரமாக சென்னைக்கு சென்ற படியால் உங்கள் முந்தைய பதிவுகளை பார்க்க முடியவில்லை. இப்பொழுது வருகிறேன். நீங்க இந்தியாவில் தான் இருக்கீங்களா ஷமீ ?

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா அக்கா, சாரதாம்மா .

    ஆமாம் அம்மா. இந்தியாவில் தான் உள்ளேன்.

    சென்னை சென்றதால் தான் வர முடியவில்லையா. அதனால் என்ன உங்களால் முடியும் பொழுது பதிவிடுங்கள்.

    உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes