வாழைப்பூ பொரியல்


வாழைப்பூ பொரியல்

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1 (சிறியது)
வெங்காயம் - 1
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும். இப்படி செய்வதால் வாழைப்பூ கருக்காமல் இருக்கும். பின்னர் வடிகட்டி கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய், கடலைபருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


3. அதில் மஞ்சள் தூள்,  உப்பு சேர்த்து வதக்கவும்...அத்துடன் வாழைப்பூ
  சேர்க்கவும்.


4. பின்னர் மிளகு தூள்,  சீரக தூள் சேர்த்து பிரட்டி விட்டு 1/2 கப் நீர் விட்டு வேக  வைக்கவும்.



5.வாழைப்பூ நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் தூவி பிரட்டி இறக்கவும்.


சுவையான வாழைப்பூ பொரியல் தயார்.


அனைத்து குழம்பு வகைகளுக்கும் ஏற்ற பக்க உணவு...


5 கருத்துகள்:

  1. மிளகு சீரகம் சேர்த்து வாழைப்பூ பொரியல்...புதுசா இருக்கு! நான் வாழைப்பூ வாங்கி வருஷக்கணக்காச்சு. கிடைச்சா செய்து பார்க்கறேன். :)

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகி.

    செய்து பார்த்து எப்படி இருந்தது சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகி.

    செய்து பார்த்து எப்படி இருந்தது சொல்லுங்க.

    பதிலளிநீக்கு

  4. வாழைப்பூ பொரியல் எனக்கு மிகவும் பிடிக்கும். சூப்பர் !

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா.

    எனக்கும் மிகவும் பிடித்த பொரியல் இது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes