மாங்காய் ஜாம்


மாங்காய் ஜாம் 

 தேவையான பொருட்கள்:

 மாங்காய் - 1
 ஜீனி - 1/2  கப்
 முந்திரி - 5
 திராட்சை - 10
 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
 உப்பு - 1/4 ஸ்பூன்
 நெய் - 2 டேபிள் ஸ்பூன்
 ஏலக்காய் - 2

 செய்முறை : 

 மாங்காயை மெல்லிய துண்டுகளாக சீவி வைத்து கொள்ளவும்.
 பானில் நெய் ஊற்றி சூடானதும் உடைத்த முந்திரி திராட்சையை போட்டு   வறுக்கவும். ஏலக்காயையும் உடன் சேர்க்கவும்.

சீவிய மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.


வெந்ததும் ஜீனியை சேர்த்து ஜாம் பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.


 சுவையான மாங்காய் ஜாம் தயார்.


ப்ரிட்ஜில் வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes