ரவா கிச்சடி

 ரவா கிச்சடி 

தேவையான பொருட்கள் : 

ரவா - 1 கப்

வெங்காயம் - 1 

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1 

பீன்ஸ் - 10 

கேரட் - 1 

இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு - 3/4 ஸ்பூன் 

கடுகு - 1/2 ஸ்பூன் 

கடலை பருப்பு - 1 ஸ்பூன் 

முந்திரி - 10 

புதினா - சிறிது

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. பானில் ரவாவை வாசம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். 

2. வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். 

3. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். 



5. பின்னர் பீன்ஸ், கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு தூள் வகைகள் சேர்க்கவும். 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.


6. அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவாவை சேர்த்து கிளறி விட்டு மூடி போட்டு வேக விடவும். 



7. ரவா வெந்ததும் நெய், புதினா சேர்த்து கலந்து விட்டு பரிமாறவும்.


சத்தான ரவா கிச்சடி தயார். 

விருப்பமான தொடுகறிகள் உடன் பரிமாறவும்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes