பனீர் 65


 பனீர் 65

தேவையான பொருட்கள் :

பனீர் - 100 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

சீரக தூள் - 1/2 ஸ்பூன்

ரெட் கலர் பவுடர் - 1/4 ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன்

எண்ணெய் - 1/2 கப்

செய்முறை :

* பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* ஒரு பவுலில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.


* பின்னர் அதனுடன் பனீரை சேர்த்து நன்கு பிசிறி வைக்கவும்.


* பானில் எண்ணெய் விட்டு சூடானதும் பனீரை சேர்த்து இருபுறமும் நன்கு சிவக்க பொறித்து எடுக்கவும்.



* சுவையான பனீர் 65  தயார். 

ஸ்டார்ட்டராக பரிமாற அருமையாக இருக்கும்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes