குதிரைவாலி சேமியா கிச்சடி 


குதிரைவாலி சேமியா கிச்சடி 

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி சேமியா - 1 பாக்கெட்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

கேரட், உருளை, பட்டாணி - 1 கப்

புதினா - சிறிது

முந்திரி - 10

கடுகு - 1/4 ஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - 11/2 ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை : 

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் 3/4 ஸ்பூன் உப்பு சேர்த்து 2 நிமிடம் சேமியாவை     ஊற வைத்து 8 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.



2. வெந்த சேமியாவை உதிர்த்து தனியே வைக்கவும்.

3. வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும், கேரட், உருளையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.

4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், மிளகாய், உப்பு, புதினா  சேர்த்து வதக்கவும்.



5. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் காய்கறிகள், முந்திரி சேர்த்து வதக்கி விடவும்.



6. காய்கறிகள் ஓரளவு வதங்கியதும் தூள் வகைகள், தயிர் சேர்த்து பிரட்டி விடவும்.


7. மசாலா எண்ணெய் பிரிந்து வந்ததும் சேமியாவை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கவும்.




ரோக்கியமான குதிரைவாலி சேமியா கிச்சடி தயார்.

ஆனியன் ரைத்தா அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.






















 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes