மினி போண்டா

திடீர் விருந்தினர்கள் வரும்பொழுது சுலபமாக தயாரிக்கலாம்..சுவையும் நன்றாகவே இருக்கிறது.

இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது 1/2 கப் உளுந்து எடுத்து வைத்துக் கொண்டு இது போல் செய்தாலும் வசதியாக இருக்கும்.



மினி போண்டா

தேவையான பொருட்கள் :

உளுந்து - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
ரவை - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை : 

உளுந்தை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த உளுந்துடன் மிளகாய், மிளகு, சீரகம், உப்பு ,இஞ்சி ஆகியவற்றுடன் சேர்த்து வடை மாவு பதத்திற்க்கு அரைக்கவும்.

சட்டியில் எண்ணெய்யை காய வைத்து சிறிய உருண்டைகளாக போட்டு எடுத்தால் மினி போண்டா தயார்.



தேங்காயை கீறி சேர்த்தால் சுவை கூடும்.என்னிடம் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை.
மல்லிதழை,புதினா, கறிவேப்பிலை கூட நறுக்கி சேர்க்கலாம்.

7 கருத்துகள்:

  1. மினி போண்டா மிக அருமை ஷமி. அடுத்த தடவை செய்யும் போது பார்சல் அனுப்புங்க !

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு மிக்க நன்றிமா.
    கண்டிப்பா பார்சல் அனுப்பிடுறேன்.

    பதிலளிநீக்கு
  3. எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன், கூடவே பொட்டுகடலை சட்னி இருந்தால் இன்னும் நல்ல இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலா அக்கா.உங்க சட்னி காம்பினேஷன் சூப்பரா இருக்கும்..

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா அக்கா.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes