வாழைக்காய் பொரியல்


வாழைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 2
பூண்டு - 5 பற்கள் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.வாழைக்காயை  தோல் எடுத்து நீரில் அலசி சதுரமாக நறுக்கி  கொள்ளவும்.

2.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து  தாளிக்கவும்.


3.பின் வாழைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.தூள் வகைகள்,உப்பு  சேர்த்து   பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.



4.வாழைக்காய் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கவும்.


எளிதில் செய்ய கூடிய வாழைக்காய் பொரியல் தயார். 
அனைத்து சாத வகைகளுக்கும் நல்ல சைட்டிஷ். 

2 கருத்துகள்:

  1. வாழைக்காய் பொரியல் அருமை ஷமீ. சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் நேரம் எவ்வளவு வித்தியாசப்படும் ஷமீ.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு நன்றி மா.
    சிங்கைக்கும் இந்தியாவிற்கும் 2.5 மணி நேர வித்தியாசம் தான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes