ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே - 1

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.... 


சில நேரங்களில் நாம் சிறு வயது நினைவுகளை மனதிற்குள் நினைத்து பார்த்து மகிழ்கிறோம்ல அதான் இந்த டைட்டில்.

டைட்டில் காரணத்தை சொல்லியாச்சு இனிமே மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியது தான்........

அப்போ அப்போ என் சிறு வயது ஞாங்களை  ரங்க்ஸ் கிட்ட சொல்றதுண்டு. அவரும் ரசிச்சு கேட்டாலும் கடைசியா இதுக்கு தான் இவ்வளவு பில்டப் குடுத்தியான்னு பல்ப் குடுப்பார்.

வேற ஒண்ணுமில்லை, நான் இவ்வளவு அறிவாளியா இருந்திருக்கேன்னு ஒரு கடுப்பு தான் ரங்க்ஸ்க்கு....

ஓகே...இப்போ இந்த பதிவுல நான் போன ஸ்கூல் பிக்னிக் பத்தி சொல்றேன்.

நான் பிக்னிக் எல்லாம் அதிகமா போனதே இல்லை.

அதுக்கு காரணம் என்னன்னா அம்மா எங்கயும் என்ன தனியா அனுப்ப பயப்படுவாங்க.

ஒரு தடவை 4வது படிக்கும் பொழுது மாமாக்கு மேரேஜ் ஆச்சு. ஒன்னு விட்ட மாமா தான்.ஆனாலும் ரொம்ப அன்பா இருப்போம்.

அப்போ அவங்க வீட்ல எல்லாரும் பூம்புகார் போக முடிவு பண்ணினாங்க. எங்க வீட்ல கூப்பிட்டதுக்கு அம்மா, சித்தி எல்லாம் வரலை.

என்னையும் எங்க அம்மம்மாவையும் (பாட்டி) போக சொன்னாங்க.

இதுக்கு முன்னாடி பூம்புகார் அத்தா கூட எல்லாம் போயிருக்கேன்னாலும் இப்போ எல்லாரும் சேர்ந்து போறதுல எனக்கு ஒரே குஷி.

ஸ்கூல்ல வேற வந்து அழைச்சிட்டு போக போறாங்கன்னு சொன்னதும் கூட படிக்குறவங்க  கிட்ட எல்லாம் சொல்லியாச்சு.

என்னையும் இன்னொரு உறவுக்கார  பெண்ணையும் வந்து கூட்டிக்கிட்டு வேன்ல போனாங்க.


வேன்ல ஏறினதும் பார்த்தா எல்லாரும் பாட்டியா இருக்காங்க. புதுசா மேரேஜ் ஆனவங்க, நாலைஞ்சு  பாட்டிஸ் அப்புறம் எங்கள மாதிரி 4 குட்டீஸ் அவ்ளோ தான்.செம போர் ஆயிடுச்சு :(

சரியாக பூம்புகாரை அடைந்ததும் மழை கொட்ட தொடங்கியது. வேனை விட்டு கீழே இறங்க கூடவில்லை. கொண்டு போன கட்டு சாதம் எல்லாம் காலி பண்ணிட்டு கிளம்பி வந்தாச்சு.

எங்க அம்மம்மா ரொம்ப சுத்தம் பார்ப்பாங்க. மழை லேசா விட்டதும் மாமா, மாமி எல்லாம் பீச் பக்கம் போனாங்க. இவங்க என்னை இறங்கவே விடலை. கடைசி வரைக்கும் வேன்ல தான் இருந்தோம்.

சாப்பிடுறதுக்கு தான் பிக்னிக் போனியான்னு என் பிரெண்ட்ஸ் எல்லாரும் கிண்டல் வேற பண்ணினாங்க. இதுக்கு போயிருக்கவே வேணாம்ன்னு புலம்பிகிட்டே இருந்தேன்.

அதுக்கு அப்புறம் பிக்னிக் எல்லாம் போனதே இல்லை.

பிரெண்ட்ஸ் போய்ட்டு வந்து கதை சொன்னா கேட்டுகிறதோட சரி..

நான் +1, +2 படிச்சது ஒரு கிறிஸ்டியன் கான்வென்ட்ல...  அங்க எப்போதும் 10வது, 12வது படிக்குற பொண்ணுங்களை பிக்னிக் கூட்டிகிட்டு போவாங்க. மார்ச்ல எக்ஸாம் வருதுன்னா ஜனவரி, பிப்ரவரில தான் போவோம்.

பிக்னிக்னா எல்லாரும் போற மாதிரி சுற்றுலா தளம் எல்லாம் இல்லை.இது பக்தி டூர் ...........

ஒரு கோவில், சர்ச், தர்கா இப்படி தான்.. அங்க போயி நாங்க இந்த வருஷம் பாஸ் பண்ணனும் நிறைய மார்க் வாங்கனும்னு பிரே பண்றதுக்கு தான்.

எப்பவும் போல அம்மா விட மாட்டேன்னுட்டாங்க ...அப்புறம் மார்னிங்  போயிட்டு ஈவ்னிங்க்குள்ள வந்துடுவோம்ன்னு சொல்லி ஒரு வழியா அனுமதி வாங்கியாச்சு.

நாங்க 50 கேர்ள்ஸ், ஒரு மேம், லேப் அசிஸ்டென்ட் மேம் ஒருத்தவங்க தான் போனோம்.

காலைல 5 மணிக்கு எல்லாம் வந்துடனும். 5.30க்கு பஸ் கிளம்பிடும்ன்னு சொல்லிட்டாங்க.

காலை, மதியம் சாப்பிட வீட்ல இருந்து தான் சாப்பாடு எடுத்து வரணும்னு சொல்லிட்டாங்க. வெளில எல்லாம் சாப்பிட அலவ் கிடையாது.

ப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் டிஸ்கஸ் பண்ணி என்ன சாப்பாடு எடுத்து வரணும்னு தான் மெனு போட்டு அம்மா கிட்ட சொல்லியாச்சு.


காலைல சாப்பாடு எல்லாம் குடுத்து பாக்கெட் மணி வேற தந்து தாத்தா ஸ்கூல்ல கொண்டு போயி விட்டாங்க.

இதுல எனக்கு ரொம்ப கடுப்பான விஷயம் என்னன்னா யூனிபாம்ல தான் போகணும்னு வேற கண்டிப்பா சொல்லிட்டாங்க. 

5.15கே போயி பார்த்தா எங்க க்ரூப்ல என்ன மாதிரி நாலு பேர் தான் வந்துருக்காங்க ஒருத்தரையும் காணோம். 

எங்க தாத்தா வேற இதுக்கு தான் இப்படி அரை தூக்கத்துல அழைச்சுகிட்டு வந்தியான்னு  டோஸ் வேற. அவங்களும் போகாம அங்கேயே இருந்தாங்க.

மத்த கேர்ல்ஸ் வந்ததும் தான் தெரிஞ்சுது சும்மா தான் சொல்லுவாங்க 5.30க்கு எல்லாம் கிளம்ப மாட்டாங்கன்னு.

அவங்க எல்லாரும் 10த்ல ஒரு தடவை டூர் போன அனுபவம் வேற.
ஒரு வழியா மேம், கேர்ல்ஸ் எல்லாரும் வந்தாச்சு.பஸ் வரலை.

அப்புறம் பல போன் பண்ணினதும் ஒரு பழைய பஸ் வந்தது. அப்போவே பக்குன்னு இருந்துச்சு. சரின்னு 7 மணிக்கு கிளம்பினோம்.

அப்போ எங்க கூட வந்தது மேத்ஸ் எடுக்குற மேம் அவங்க சிரிக்குறதுக்கு கூட காசு கொடுக்கணும். அதனால அமைதியா வந்தோம்.

பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.






      


2 கருத்துகள்:

  1. சிறுவயது ஞாபகங்கள் பதிவு ரசித்து படித்தேன். தொடருங்கள் ஷமீ. நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சாரதாம்மா..
    விரைவில் அடுத்த பதிவு போடுறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes