கொண்டைக்கடலை குருமா



கொண்டைக்கடலை குருமா 

தேவையான பொருட்கள் :

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கறிமசாலா தூள் / தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
தேங்காய் - 1/2 கப்
பட்டை, கிராம்பு , ஏலக்காய் - தலா 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.மிளகாயை நடுவில கீறி வைக்கவும். தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.கடலையை 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2. குக்கரில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

3. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.கடலையை சேர்க்கவும்.


4. தூள் வகைகள் சேர்த்து பிரட்டி விடவும்.1 கப் நீர் சேர்க்கவும்.

5.கடைசியாக அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 1 விசில் வைக்கவும்.

சுவையான கொண்டைக்கடலை குருமா  தயார்.
இது பரோட்டா, ஆப்பம், இடியாப்பம் வகைகளுடன் நன்கு பொருந்தும்.

மற்ற குருமா வகையை காண :

4 கருத்துகள்:


  1. கொண்டைக்கடலை குருமா சூப்பர். எனது கொண்டைக்கடலை குருமா பதிவில் உங்கள் கருத்து இல்லை. பார்த்து கருத்திடவாருங்கள் ஷமீ.

    பதிலளிநீக்கு
  2. சூப்பர்மா,
    இப்ப தான் தங்கள் கருத்து பெட்டி, எனக்கு வசதிப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி சாரதாம்மா..உங்கள் குறிப்பிலும் பதிவு போட்டுருக்கேன் ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes