ஸ்பைசி அவல்


ஸ்பைசி  அவல்

தேவையான பொருட்கள் : 

அவல் - 2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய்  - 1
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1.அவலை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து வடித்து
   கொள்ளவும்.வெங்காயம்,மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு , கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், மிளகாய் , உப்பு சேர்த்து வதக்கவும்.


3. வெங்காயம் சிவற வதங்கியதும் தூள் வகைகள் சேர்க்கவும்.


4. கடைசியாக அவலை சேர்த்து பிரட்டி விட்டு 2 நிமிடம் கழித்து இறக்கவும்.


எளிதில் செய்யக்கூடிய ஸ்பைசி  அவல் தயார்.


சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

மல்லி புதினா இருந்தால் பொடியாக நறுக்கி மேலே தூவினால் வாசமாக இருக்கும்.

3 கருத்துகள்:

  1. ஸ்பைசி அவல் வித்தியாசமான குறிப்பு. செய்து பார்க்கிறேன் ஷமீ.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு புதிது, செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க மா.வருகைக்கு நன்றி..
    செய்து பாருங்க மகேஸ்வரி நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes