உருளை ஃப்ரை


உருளை ஃப்ரை

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லிதழை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.உருளைக்கிழங்கை பொடியாக அரிந்து நீரில் நன்கு அலசிக் கொள்ளவும்.
   வெங்காயத்தை  மெல்லியதாகவும், மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.
2.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்  கடுகு தாளித்து    உருளைக்கிழங்கை  சேர்த்து நன்கு வதக்கவும்.


3.தூள் வகைகள் சேர்த்து  பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.


4.உருளைக்கிழங்கு வெந்து வரும் பொழுது வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லிதழை சேர்த்து பிரட்டி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.


இந்த முறையில்  உருளை ஃப்ரை செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

5 கருத்துகள்:

  1. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சாரதாம்மா ...

    பதிலளிநீக்கு
  2. அப்பாடா நானும் இப்படி தான் செய்வேன், ஏதோ எனக்கு தெரிந்தது.
    சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. நீங்களும் இந்த முறையில் தான் செய்வீர்களா ? ரொம்ப சந்தோஷம் ...

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மகேஸ்வரி .

    பதிலளிநீக்கு
  4. உங்கள் சமையல் அணைத்தும் சிறப்பாக உள்ளது.வீடியோ எடுத்து youtube இல் பதிவிடலாமே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes