ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.... - 2


 ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.... 

முதல்ல பூந்தோட்டத்துல  இருக்குற ஒரு கோவிலுக்கு போனோம். அது தான் முதல் முறை நான் கோவிலுக்கு போறது. அங்க ஒரு 30 நிமிடம் தான் இருந்திருப்போம். அப்புறம் அங்க இருந்து கிளம்பி திருவாரூர் கோவிலுக்கு போனோம்.

அதுக்குள்ள செம பசி வேற எல்லாருக்கும். கொண்டு வந்த ஸ்னாக்ஸ சாப்பிட்டுகிட்டு போனோம்.

அப்புறம் திருவாரூர் கோவில் போனதும் காலை டிபன் சாப்பிட்டாச்சு.

அப்புறமும் கோவில் எல்லாம் சுத்தி பார்த்துட்டு அடுத்து வேளாங்கண்ணி போனோம்.

அங்கயும் நான் போறது முதல் தடவைங்கிறதால ஆசையா தான் இருந்துச்சு.

ஸ்பெஷல் ப்ரேயர்ல எல்லாம் கலந்துகிட்டு கடைத்தெரு எல்லாம் சுத்தி பார்த்தோம்.

சர்ச் எல்லாம் மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள். பீச் தான் அந்தளவு 
சுத்தமாக இல்லை.

எல்லா தோழிகளும் வீட்டிற்கு என்று பெரிய சைஸ் மெழுகுவர்த்திகள் வாங்கினோம்.

மதிய உணவையும் அங்க முடிச்சுகிட்டு நாகூர் போனோம். இது நமக்கு தெரிஞ்ச இடம் பிரேயர் பண்ணிட்டு பர்சேஸ் தான்.

முன்னாடியே வேளாங்கன்னில என் சித்தி பையனுக்கு கிலுகிலுப்பை, பொம்மை எல்லாம் வாங்கிட்டேன் .


நாகூர் வந்து தம்ரூட், குலோப் ஜாமூன் தானே அம்மா வாங்குவாங்க நம்மளும் வாங்கணும்னு  எல்லாம் மறக்காம வாங்கியாச்சு.


என் ப்ரெண்ட் எங்க வீட்ல பூந்தி, கடலை எல்லாம் வாங்குவாங்க அதெல்லாம் நீ சாப்பிட மாட்டியான்னு கேட்க உடனே நம்ம சாப்பாட்டு புத்தி போகுமா நானும் சாப்பிடுவேன்பான்னு சொல்லி  அதையும் வாங்கிட்டேன்.

இப்படியே எல்லா காசையும் காலி பண்ணிட்டேன். அம்மா குடுத்த பணம் பத்தாம ப்ரெண்ட் கிட்ட கடன் வேற வாங்கிட்டேன் :) கடைசியா எனக்காக வாங்கினது ஒரு கீசெயின் தான்.


ஊர் திரும்ப பஸ் ஏறிட்டோம். போகும் பொழுது  கோபமா வந்த மேத்ஸ் மேம் கூட ஒரு நாள்ல ப்ரெண்ட் ஆயிட்டாங்க.

ஜாலியா பாட்டெல்லாம் பாடிக்கிட்டு வரும் பொழுது திடீரென்று ஒரு சத்தம். இஞ்சின்ல இருந்து தான் சவுண்டுன்னு நினைக்கிறேன். 

ட்ரைவர், கிளீனர் ரெண்டு பேரும் ரொம்ப நேரம் முயற்சி பண்ணி பார்த்துட்டு திரு திருன்னு முழிக்கிறாங்க.

எங்க மேம் வேற சீக்கிரம் சரி பண்ணுங்க வயசு பொண்ணுங்களை  வச்சுக்கிட்டு ரோட்ல நிக்க முடியுமான்னு டென்ஷன் ஆகுறாங்க.

அந்த இடம் வேற நல்ல காடு மாதிரி இருந்துச்சு. வேற பஸ், கார் எதுவும் வரலை. அப்போ தான் எனக்கே பயமா இருந்துச்சு. காலைல இருந்து அனுபவிச்ச சந்தோஷம் எல்லாம் போயிடுச்சு.

ட்ரைவர் யாராவது மெக்கானிக் இருந்தா கூட்டிகிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டார்.

டூவீலர்ல போற வர பசங்க எல்லாம் பஸ்ஸ தட்டி சவுண்ட் குடுக்குறாங்க. மேம் உடனே எல்லாரையும் அமைதியா இருக்க சொல்லிட்டு லைட் எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டாங்க.

எல்லாரும் நடுங்கி போய் இருக்கோம்.எங்க க்ரூப்ல ஷாலினி என்று ஒரு பெண். அவ தான் ஆரம்பிச்சு வச்சா. அவளை  பார்த்து  எல்லாரும் ஒரே அழுகை தான்.

இதுல நான் என் ப்ரெண்ட் மடில வேற படுத்துக்கிட்டு அழறேன். அதை வச்சே பின்னாட்களில் அவ என்னை கலாய்ச்சிகிட்டு இருப்பா.

அப்போ எங்க யார் கிட்டயும் செல் கூட இல்லை மேம் உட்பட.

ஒரு வழிய மெக்கானிக் வந்து ரிப்பேர் பார்த்து 9.30க்கு கிளம்பினோம். திரும்ப போய் சேரும் பொழுது 10.30 ஆயிடுச்சு. எங்க வீட்ல இருந்து  அம்மா, தாத்தா, பாட்டின்னு எல்லாரும் வந்துருக்காங்க.

எல்லா ப்ரெண்ட்ஸ் வீட்லயும் இதே கதை தான். சிஸ்டர் கிட்ட சில பேரன்ட்ஸ் சண்டை கூட போட்டுருக்காங்க. சிஸ்டர் எல்லாரையும் கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு எங்களை அனுப்பி வச்சாங்க.

ஒரு சில மணி நேரம் தான் என்றாலும் அப்போ அனுபவிச்ச பயம் இப்போவும் நினைவு இருக்கும். சில நேரம் பள்ளி தோழிகள் சந்திக்கும் பொழுது இதை சொல்லி சிரிப்போம். 

வீட்டிற்கு வந்து நான் வாங்கிய பொருட்களை எல்லாம் காட்டியதும் ஒரே சந்தோஷம் தான்.

ஆனால் அம்மா மட்டும் இதற்கு தான் உன்னை தனியே அனுப்ப மாட்டேன் என்று சொல்வது என்று வருத்தப்பட்டார்கள் .

அதனால் கல்லூரி சுற்றுலாவிற்கு அனுப்பவே மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். அவரது அன்பை புரிந்து நானும் செல்லவில்லை.

எனது பள்ளி சுற்றுலா அனுபவத்தை  பொறுமையாக படித்ததற்கு மிக்க நன்றி.


2 கருத்துகள்:

  1. பள்ளி சுற்றுலாவை எல்லோரிடம் பகிர்ந்து கொண்டது அருமை ஷமீ .

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சாரதா அம்மா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes