கோதுமை ரவை கேசரி


கோதுமை ரவை கேசரி 

தேவையான பொருட்கள் : 

கோதுமை ரவை : 1 கப்
சீனி - 3/4 கப்
மில்க்மெயிட் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
ஆரஞ்ச் புட்கலர் - சிறிது
உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை : 

1. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்து கொள்ளவும். பின்னர் அதே நெய்யில் ரவையை வாசம் வரும் வரை வறுத்து தட்டில் கொட்டி ஆற விடவும்.



2. 2 கப் நீருடன் புட்கலர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் ரவையை சிறிது சிறிதாக தூவி மூடி போட்டு வேக விடவும்.



3. ரவை வெந்ததும் சீனி, வறுத்த முந்திரியை சேர்க்கவும்.


4. சீனி இளகியதும் நெய், மில்க்மெயிட் சேர்த்து கிளறி விடவும்.



5. கேசரி நன்கு சுருண்டு கெட்டியாக வரும் பொழுது இறக்கவும்.


சுவையான கோதுமை ரவை கேசரி ரெடி.


நான் கம்மியாக தான் நெய் சேர்த்துள்ளேன். விரும்பினால் 1/4 கப் நெய் அதிகம் சேர்க்கலாம்.

எனது மற்ற கோதுமை  ரவை உணவுகள் :

கோதுமைரவை உப்புமா

கோதுமை ரவை பொங்கல்

2 கருத்துகள்:

  1. நான் உங்கள் பூரி மசாலாவை எதிர் பார்த்து இருந்தேன் ஷமீ. இனிப்பான கேசரியை கொடுத்து அசத்தீடீங்க !

    பதிலளிநீக்கு
  2. பாராட்டிற்கு ரொம்ப நன்றி சாரதாம்மா.

    பூரி மசாலாவில் மசாலா மட்டும் தான் இருந்துச்சு.பூரியும் செய்முறையும் சேர்த்து ஒரே பதிவா போடுறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes