ஹாட் & சோர் சூப்


ஹாட் & சோர் சூப்

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் - 1 பாக்கெட்
நூடுல்ஸ் மசாலா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
குடைமிளகாய் - 1/2
முட்டை - 1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
சிக்கன் - சிறிது (விரும்பினால் )
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளி, கேரட்,குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2. சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

3.இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போனதும் சிக்கன், தக்காளி, கேரட், குடைமிளகாய் சேர்க்கவும்.

4. சாஸ் சேர்த்து பிரட்டி விட்டு நூடுல்ஸ் மசாலா,  தூள் வகைகளை சேர்த்து 4 கப் நீர் சேர்த்து கொதிக்க  விடவும்.


5. நூடுல்சை உடைத்து போட்டு 5 நிமிடம் வேக விடவும். கடைசியாக முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கவும்.

சுலபமாக செய்யகூடிய ஹாட் & சோர் சூப் தயார்.

ஸ்ப்ரிங் ஆனியன் தூவி பரிமாறலாம்.

* விரும்பிய காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்.

* நான் சிக்கன் எலும்பு தான் சேர்த்துள்ளேன். போன்லெஸ் சிக்கன் பயன்படுத்தினாலும் அருமையாக இருக்கும்.

எனது மற்ற சூப் வகைகள். 

பட்டாணி சூப்

ஹாட் சிக்கன் சூப்

2 கருத்துகள்:

  1. ஹாட் & சோர் சூப் பார்க்கவே பிரமாதமாக இருக்கு ஷமீ. அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு ப்ளாகிலும் வேலை பார்ப்பது பாராட்டக்கூடிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு நன்றி சாரதாம்மா.

    அலுவலக வேலைகளுக்கு நடுவே குறிப்பு தருவது கொஞ்சம் சிரமமாக தான் இருக்கு.

    ஆனால் அனுபவங்கள் பகுதி எழுதும் பொழுது மனதில் இருக்கும் ஸ்ட்ரெஸ் எல்லாம் போய் விடுகிறது.

    சொல்லப்போனால் பதிவு எழுதுவது எனக்கு மிகப் பெரிய ரிலாக்சேஷன்.

    அதிலும் கருத்துக்கள் வந்தால் மகிழ்ச்சி வேறு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes