சிக்கன் க்ரேவி 

 

சிக்கன் க்ரேவி 

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ 

வெங்காயம் - 1 

தக்காளி - 3 

பச்சை மிளகாய் - 1

இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

சீரக தூள் - 1/2 ஸ்பூன் 

மல்லி தூள் - 1 ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன் 

தயிர் - 1கப்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

மல்லிதழை, புதினா - சிறிது 

செய்முறை : 

1. சிக்கனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். 

2. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். 




4. பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.


5. தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும். 


6. மசாலா வாசம் போனதும் தயிர் சேர்க்கவும்.


7. 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 3 விசில் வைக்கவும். மல்லிதழை, புதினா தூவி பரிமாறவும்.


சுவையான சிக்கன் க்ரேவி தயார். 


பரோட்டா, சப்பாத்தி, நெய் சோறு இவற்றிற்க்கு அருமையாக இருக்கும்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes